Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பை அணியில் நீங்க 3 பேருமே இல்ல.. அதிரடியாக களையெடுக்கப்பட்ட வீரர்கள்

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் மூன்று வீரர்கள் அதிரடியாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 

selection committee indirectly convey those 3 players will not include in t20 world cup squad
Author
India, First Published Jul 22, 2019, 1:15 PM IST

உலக கோப்பையில் தோற்று ஏமாற்றத்துடன் நாடு திரும்பிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடுகிறது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. தேர்வுக்குழு கூட்டத்திற்கு பின்னர் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அணியை அறிவித்தார். 

 தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் 2019 ஐபிஎல் சீசனில் ஆடி கவனத்தை ஈர்த்த ராகுல் சாஹர் ஆகிய இருவருக்கும் டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி உலக கோப்பையில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. மிடில் ஓவர்களில் இந்திய அணிக்கு தேவைப்பட்டபோது குல்தீப் - சாஹல் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கவில்லை. 

selection committee indirectly convey those 3 players will not include in t20 world cup squad

அதுமட்டுமல்லாமல் அவர்கள் அணிக்கு வந்த புதிதில் குல்தீப்பின் வேரியேஷன்களையும் கையசைவுகளையும் கணிக்கமுடியாமல் திணறிய எதிரணி பேட்ஸ்மேன்கள், தற்போது அதை கண்டறிந்துவிட்டதால் இவர்களின் பவுலிங் எடுபடவில்லை. குல்தீப்பிடமாவது வேரியேஷன்கள் இருக்கின்றன. ஆனால் சாஹலிடம் அதுவும் இல்லை. அவர் இதுவரை அணியில் இருந்தது கோலியின் புண்ணியத்தால்தான். 

இவர்கள் இருவருமே விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தனர். ஆனால் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகின்றனரே என்பதற்காக அணியில் இருந்தனர். ஆனால் உலக கோப்பையில் ரன்களையும் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை.  

selection committee indirectly convey those 3 players will not include in t20 world cup squad

இந்நிலையில், டி20 அணியில் இருவரும் ஓரங்கட்டப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சாஹர் ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், குல்தீப்பும் சாஹலும் நீக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு டி20 உலக கோப்பை அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக பறைசாற்றும் விதமாகவே இந்த புறக்கணிப்பு அமைந்துள்ளது. 

அதேபோல டி20 அணிகளில் மட்டுமாவது எடுக்கப்பட்டு கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், இந்த முறை டி20 அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். எனவே குல்தீப், சாஹல், தினேஷ் கார்த்திக் ஆகிய மூவருக்கும் டி20 உலக கோப்பை அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளது தேர்வுக்குழு. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios