Asianet News TamilAsianet News Tamil

அவர மாதிரி ஒரு திறமைசாலி இந்திய அணியில் இல்லவே இல்ல!! லாஜிக்கா அடித்த சேவாக்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக திகழ்கிறது. 

sehwag feels no one can even closer to hardik pandya
Author
India, First Published May 15, 2019, 2:14 PM IST

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் உள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக திகழ்கிறது. இதற்கிடையே, அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 

காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சில போட்டிகளில் தடை பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, இந்த விவகாரத்திற்கு பின்னர் புது மனிதராகவும் வீரராகவும் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை ஒரு ஆல்ரவுண்டராக வேறு எந்த இந்திய வீரரும் நெருங்கக்கூட முடியாது என்று சேவாக் தெரிவித்துள்ளார். 

sehwag feels no one can even closer to hardik pandya

நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபாரமானதாக இருந்தது. 15 இன்னிங்ஸ்களில் ஆடி 402 ரன்களை குவித்தார் ஹர்திக் பாண்டியா. ஸ்டிரைக் ரேட் 190க்கும் மேல். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே அசத்தும் திறமை வாய்ந்த ஹர்திக் பாண்டியா, களத்தில் தனது 200% அர்ப்பணிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்.

ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிரட்டக்கூடிய ஹர்திக் பாண்டியாவிற்கு நிகரான ஒரு ஆல்ரவுண்டர் இந்திய அணியில் இல்லை. ஒருவேளை அப்படியொருவர் இருந்திருந்தால், காஃபி வித் கரன் சர்ச்சைக்கு பின்னர் ஹர்திக்கால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்திருக்கவே முடியாது என்று சேவாக் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios