மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையேயான போட்டியை மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியுடன் வந்து பார்த்த சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரை, ஷுப்மன் கில்லை வைத்து கலாய்த்துவருகின்றனர் ரசிகர்கள். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் சரியாக அமையவில்லை. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ஆடிய 6 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இனிமேல் இந்த சீசனில் மும்பை அணி பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியாது.

இந்த சீசனில் இன்று மும்பை அணி லக்னோவிற்கு எதிராக ஆடிய போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 199 ரன்களை குவித்தது. 200 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணி, 20 ஓவரில் 181 ரன்கள் அடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது மும்பை அணி.

இந்த போட்டியை காண மும்பை அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கரின் மொத்த குடும்பமும் வந்திருந்தது. சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் அங்கம் வகிப்பதால், அவர் டக் அவுட்டில் இருந்தார்.

சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி மற்றும் மகள் சாரா டெண்டுல்கர் ஆகியோரும் போட்டியை நேரில் பார்த்து ரசித்தனர். சச்சின் மகள் சாரா மும்பைஇந்தியன்ஸ் ஜெர்சியில் போட்டியை பார்த்தார். கேமராமேன் சாரா டெண்டுல்கரை கண்டுபிடித்து கேமராவை திருப்பியதையடுத்து, அந்த புகைப்படம் செம வைரலானது.

அந்த வைரலான புகைப்படத்தை கண்டு ரசிகர்கள், சாரா டெண்டுல்கரை ஷுப்மன் கில்லை வைத்து கிண்டலடித்துவருகின்றனர். 2020 ஐபிஎல்லில் கேகேஆர் - மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டியில் அப்போது கேகேஆர் அணியில் ஆடிய ஷுப்மன் கில் டைவ் அடித்து செய்த ஃபீல்டிங்கை டிவியில் ஃபோட்டோ எடுத்து, அந்த ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சாரா டெண்டுல்கர், ஹார்ட்டுகளையும் பறக்கவிட்டார். அதுதான் சாராவுக்கும் கில்லுக்கும் இடையே காதல் என்ற பேச்சுக்கு வித்திட்டது.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…