MI லெஜெண்டின் மகள் சாரா டெண்டுல்கர் செய்த வேலைய பாரு – இன்ஸ்டா ஸ்டோரியில் தோனியின் மாஸ் எண்ட்ரி வீடியோ!
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா, வான்கடே மைதானத்தில் எண்ட்ரி கொடுத்த தோனியின் வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
எம்.எஸ்.தோனிக்கு சாதாரண மக்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும், அவர்களது மகன், மகள், நடிகர், நடிகைகள் என்று ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவர் மீது அளவுகடந்த அன்பு கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரான சாரா, மும்பை அணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தாலும் கூட தோனியின் மாஸான எண்ட்ரி வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த சிஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மட்டுமே ஆறுதல் கொடுத்தார். எனினும், அவரது 2ஆவது ஐபிஎல் சதம் வீணானது.
அவர், 63 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ரோகித் சர்மா உதாரணமாக இருந்தார். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் இந்தப் போட்டியை நேரில் வந்து பார்த்து ரசித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல் இன்னிங்ஸில் தோனி மைதானத்திற்குள் வருவதை வீடியோவாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் சிக்ஸர் அடிப்பதை ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.