சச்சின் பயங்கரமான மூளைக்காரர்.. அவரை ஸ்லெட்ஜிங் செய்தது எனக்கே எதிராக திரும்பியது.! சக்லைன் முஷ்டாக் வருத்தம்
சச்சின் டெண்டுல்கரை ஸ்லெட்ஜிங் செய்ததை நினைத்து 26 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வருந்துகிறார் சக்லைன் முஷ்டாக்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி, 100 சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்த மாபெரும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மிகவும் நேர்மையானவர், ஒழுக்கமானவர். களத்தில் அவுட்டே இல்லாததற்கு அம்பயர் அவுட் கொடுத்தால், மறுபேச்சின்றி வெளியேறும் சச்சின், அவர் அவுட் என்பது அவருக்கு தெரிந்தால் அம்பயர் அவுட் கொடுக்கும் வரை காத்திருக்க மாட்டார். அவராகவே வெளியேறிவிடுவார். அம்பயர் அவுட் கொடுக்காவிட்டாலும் கூட, அது அவுட் என்று அவருக்கு தெரிந்தால் நடையை கட்டிவிடும் நேர்மையானவர்.
அதேபோலவே எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டார். தன்னை ஸ்லெட்ஜிங் செய்வோருக்கு வாயில் பதிலடி கொடுக்காமல் பேட்டில் பதிலடி கொடுக்கும் இயல்புடையவர் சச்சின்.
மும்பையில் சிறுவர்களுடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடிய வார்னர்..! வைரல் வீடியோ
அதுமாதிரியான ஒரு சம்பவத்தைத்தான் பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் பகிர்ந்துள்ளார். தான் சச்சினை முதல் முறையாக ஸ்லெட்ஜிங் செய்ததையும், அதுவே தனது கடைசி ஸ்லெட்ஜிங்காக அமைந்ததையும் பகிர்ந்துள்ளார் சக்லைன் முஷ்டாக்.
அந்த சம்பவம் குறித்து பேசிய சக்லைன் முஷ்டாக், 1997ல் கனடாவில் நடந்த சஹாரா கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சச்சின் பேட்டிங் ஆடியபோது, அவரை ஸ்லெட்ஜிங் செய்தேன். அவரிடம் என்ன சொன்னேன் என்பது சரியாக நினைவில்லை. ஆனால் மிகக்கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினே. ஆனால் அவர் எனக்கு அளித்த பதிலடி, என் நெஞ்சை தைத்ததால் இன்றும் அது நினைவிருக்கிறது.
நான் அவரை ஏதோ சொல்லி ஸ்லெட்ஜ் செய்ய, என்னிடம் வந்த சச்சின், நான் உங்களிடம் தகாத முறையில் நடந்ததேயில்லையே... பின் நீங்கள் ஏன் என்னிடம் தவறாக நடக்கிறீர்கள் என்று கேட்டார். சச்சின் அப்படி கேட்டதும், எனக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது. அடுத்த நான்கைந்து ஓவர்கள் அவர் என்னிடம் பேசியதை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் அந்த 4-5 ஓவர்களிலும் தொடர்ச்சியாக பவுண்டரிகளை அடித்து களத்தில் நன்றாக செட்டில் ஆகிவிட்டார். அப்போதுதான் எனக்கு புரிந்தது.. சச்சின் என்னிடம் மைண்ட்கேம் ஆடிவிட்டார் என்பது.. ஆம்.. ஸ்லெட்ஜிங் செய்த என்னிடம் தன்மையாக பேசி என்னை திசைதிருப்பிவிட்டு, எனது அடுத்த 5 ஓவர்களிலும் பவுண்டரிகளை விளாசினார். நான் சுதாரிப்பதற்குள்ளாக ஆட்டம் கைமீறி போய்விட்டது.
ICC WTC ஃபைனலில் தயவுசெய்து அந்த பையனை ஆடவைக்காதீங்க.. இவரே போதும்..! கவாஸ்கர் அதிரடி
அந்த போட்டி முடிந்ததும், மாலை அவரை சந்தித்து நீங்கள்(சச்சின்) ரொம்ப ஸ்மார்ட் என்று கூறினேன். அவர் சிரித்துவிட்டுச்சென்றார் என்று சக்லைன் முஷ்டாக் கூறியுள்ளார்.