Asianet News TamilAsianet News Tamil

ஒரு கண்டத்திலிருந்து தப்பித்து இன்னொரு கண்டத்தில் சிக்கிய சஞ்சு சாம்சன்!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அடித்த கேட்சை அசலாங்கா கோட்டை விட, அதே ஓவரின் 5ஆவது பந்திலேயே அவர் அடித்த கேட்சை மதுசங்கா பிடித்துள்ளார்.
 

Sanju Samson Out for 5 runs against Sri Lanka 1st T20 Match in Mumbai
Author
First Published Jan 3, 2023, 7:58 PM IST

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியாக கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக சாதிக்குமா இந்தியாவின் இளம் படை?

இந்திய அணியில் ஷுப்மன் கில், ஷிவம் மாவி ஆகியோர் டி20 போட்டியில் அறிமுகமாகியுள்ளனர். அர்ஷ்தீப் சிங் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அணியில் இடம் பெறவில்லை. தற்போது முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணியில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர். ரஜிதா வீசிய முதல் ஓவரிலேயே இஷான் கிஷான் ஒரு சிக்சர், 2 பவுண்டரி, 2 ரன்கள் அடிக்க, ஒரு வைடு என்று மொத்தமாக 17 ரன்கள் கிடைத்தது.

ரிஷப் பண்ட் குணமடைய இந்திய அணியின் பிரார்த்தனையும், வாழ்த்தும்: பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!

டி20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டி20 போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். எனினும், 5 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து தீக்‌ஷனா ஓவரில் எல்பிடள்பியூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதோடு, ஒரு ரெவியூவையும் வீணாக்கினார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: திரும்ப வந்த பும்ரா: இனி எல்லாமே நல்லாதான் நடக்கும்!

இவரைத் தொடர்ந்து வந்த மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி விளாசிவிட்டு கீப்பர் சைடு அடிக்கிறேன் என்று அடித்து ஸ்கொயர் லெக் சைடில் நின்றிருந்த கருணாரத்னேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்புறம் வந்த சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் முறையாக டி20ல் கால் பதிக்கும் சுப்மன் கில், ஷிவம் மாவி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங்!

அதுவும் தனஞ்ஜெயா டி சில்வா 6ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் அடித்த கேட்சை அசலாங்கா கோட்டை விட அதே ஓவரில் 5ஆவது பந்தில் ஆஃப் சைடு கவர் திசையில் நின்றிருந்த மதுசங்காவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரு முறை தான் கேட்சை விடுவார்கள். அப்படி விடும் போதே சுதாரித்துக் கொண்டு ஆட வேண்டும். அப்படி ஆடாமல், மறுபடியும் மறுபடியும் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார்.

மீண்டும் ஐபிஎல்லில் கங்குலி: டெல்லி கேபிடல்ஸ் அணியில் கச்சிதமான போஸ்டிங்!

Follow Us:
Download App:
  • android
  • ios