ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் கிடைத்த வாய்ப்பில் சஞ்சு சாம்சன் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், முதல் 2 டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், இந்தப் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் ஓவரிலேயே நடந்த குளறுபடி – அரே விரூ பந்து பேட்டில் பட்டத பாக்கலயா? ரோகித் சர்மா கேள்வி!
அதன்படி ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். முதல் 2 போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த ரோகித் சர்மா இன்றைய போட்டியில் ஒரு ரன்கள் எடுப்பதற்கு தடுமாறினார். எனினும், அவர் 2ஆவது ஓவரில் ஒரு ரன் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஃபரீத் அகமது மாலிக் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அவர், வீசிய 3ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 4ஆவது பந்தில் முதல் முறையாக டி20 கிரிக்கெட் வரலாற்றில் கோல்டன் டக் முறை ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து முதல் 2 டி20 போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் துபே 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
பாகிஸ்தானை பந்தாடிய ஃபின் ஆலன் – 3ஆவது போட்டியில் வெற்றி; 3-0 என்று தொடரை வென்ற நியூசிலாந்து!
கடைசியாக சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இது அவருக்கான நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டது. மேலும், வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்த போட்டி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், அவர், ஃபரீத் அகமது மாலிக் ஓவரில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
எஸ்ஏ20 லீக் தொடர் – சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி, துள்ளிக் குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்!
இதன் மூலமாக இனிமேலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் போட்டிக்கு பிறகு ஐபிஎல் தொடர் தான் நடக்க இருக்கிறது. அதன் பிறகு டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. ஆதலால், சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
