IPL 2023: ஆர்சிபி தான் இந்த சீசனின் பெஸ்ட் பவுலிங் அட்டாக்..! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
ஐபிஎல் 16வது சீசனின் சிறந்த பவுலிங் அட்டாக்கை பெற்றிருக்கும் அணி ஆர்சிபி தான் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. விராட் கோலி என்ற தலைசிறந்த வீரரை அணியில் பெற்றிருந்தும் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ், கெய்ல் என பல தலைசிறந்த வீரர்களை அணியில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெற்றிருந்தும் கூட ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றிராதது அந்த அணியின் சோகம்.
SA vs WI: ரோவ்மன் பவல் சிக்ஸர் மழையால் கடின இலக்கை அடித்து வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி கடைசியில் ஏமாற்றத்துடன் சீசனை முடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளது ஆர்சிபி அணி. கடந்த சீசனுக்கு முன்பாக விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஃபாஃப் டுப்ளெசிஸின் தலைமையில் கடந்த சீசனில் ஆடிய ஆர்சிபி அணி, இந்த சீசனிலும் அவரது கேப்டன்சியிலேயே ஆடுகிறது.
இந்த முறை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே வலுவான அணியாகவும் நல்ல பேலன்ஸான அணியாகவும் திகழ்கிறது. அந்த அணியின் பேட்டிங் எல்லா சீசன்களிலும் சிறப்பாகவே இருந்திருக்கிறது. பவுலிங் தான் பலவீனமாக இருந்தது. இந்நிலையில், இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் தான் மிகச்சிறந்த மற்றும் பலம் வாய்ந்த பவுலிங் யூனிட் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.
IPL 2023: ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸி., அதிரடி ஆல்ரவுண்டரை தட்டி தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்
இதுகுறித்து கருத்து கூறியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், ஆர்சிபி அணியின் ஃபாஸ்ட் பவுலிங் டெப்த் சிறப்பாக உள்ளது. ஹேசில்வுட் ஃபிட்டாக இல்லையென்றால் கூட, ரீஸ் டாப்ளி இருக்கிறார். முகமது சிராஜ், ஹர்ஷல் படேல் இருக்கிறார்கள். தரமான ஸ்பின்னர் ஹசரங்கா இருக்கிறார். மேக்ஸ்வெல்லும் பந்துவீசுவார். எனவே என்னை பொறுத்தமட்டில் இந்த சீசனில் ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட் தான் மிகச்சிறந்தது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.