3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடர், டி20 தொடர், அவற்றை தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது.

இந்த தொடர்களுக்கான வர்ணனையாளர் குழுவில் சஞ்சய் மஞ்சரேக்கர் சேர்க்கப்பட்டுள்ளார். ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று விமர்சித்தது, ஹர்ஷா போக்ளேவுடனான மோதல் என தொடர் சர்ச்சைகளில் சிக்கிவந்த சஞ்சய் மஞ்சரேக்கரை, பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கியது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் சஞ்சய் மஞ்சரேக்கர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 2 மொழிகளுக்கான வர்ணனையாளர் குழுவில் ஹர்ஷா போக்ளே, அஜித் அகார்கர், முரளி கார்த்திக், அஜய் ஜடேஜா ஆகியோருடன் சஞ்சய் மஞ்சரேக்கரும் உள்ளார்.

இந்தி வர்ணனையாளர் குழுவில் சேவாக், முகமது கைஃப், ஜாகீர் உட்பட ஆறு பேர் உள்ளனர். க்ளென் மெக்ராத் மற்றும் நிக் நைட் ஆகியோர் ஆங்கில வர்ணனையாளர்களாக உள்ளனர்.