Asianet News TamilAsianet News Tamil

தோனி மனசுல என்னதான் இருக்குனு நேரடியா கேட்ருங்க.. பிசிசிஐ முன்னாள் அதிகாரி அதிரடி

தோனி ஓய்வு குறித்து எதுவும் பேசாத நிலையில், தோனியை அணியில் எடுப்பது குறித்து தேர்வுக்குழு சிந்திக்கவில்லை. எனவே தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது.

sanjay jagdadel speaks about dhoni retirement
Author
India, First Published Jul 20, 2019, 5:30 PM IST

உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி இன்னும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. உலக கோப்பை தோல்வியை அடுத்து, அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் உள்ளது. 

தோனி ஓய்வு குறித்து எதுவும் பேசாத நிலையில், தோனியை அணியில் எடுப்பது குறித்து தேர்வுக்குழு சிந்திக்கவில்லை. எனவே தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது. இல்லையெனில் அவரை ஓரங்கட்ட வேண்டிவரும் என்கிற ரீதியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

sanjay jagdadel speaks about dhoni retirement

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்த தகவல் வெளியானது. இந்திய அணிக்கு இனிமேல் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர். தோனி 15 பேர் கொண்ட அணியில் வேண்டுமானால் இருப்பார். ஆனால் ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்பேயில்லை என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்ததாக தகவல் வெளிவந்தது. 

இதன்மூலம் தோனி அவரது ஓய்வு முடிவை அவரே அறிவிக்க வேண்டும் என்பதற்காக பிசிசிஐ நெருக்கடி கொடுப்பது தெரிகிறது. ஆனால் தோனி இதற்கெல்லாம் மசியவேயில்லை. தோனியின் ஓய்வுதான் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. தோனிக்கு இனிமேல் அணியில் இடமில்லை என்றால் அதை அவரிடம் தேர்வுக்குழு நேரடியாக தெரிவித்துவிட வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியிருந்தார். 

sanjay jagdadel speaks about dhoni retirement

தோனி ஓய்வு பெற்றால் அவரது வணிக ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என்பதால் கண்டிப்பாக 2022ம் ஆண்டுவரை தோனி ஓய்வு பெறமாட்டார் என்று கம்பீர் அடித்து கூறியிருந்தார். இந்நிலையில், தோனிக்கு தற்போதைக்கு ஓய்வு பெறும் ஐடியாவே இல்லை என்று அவரது நண்பர் அருண் பாண்டே கூறியிருந்தார். இதன் மூலம் கம்பீர் சொன்னது உண்மைதான் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 

தோனியின் ஓய்வு குறித்து தீவிரமாக பேசப்பட்டுவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினரும் முன்னாள் பிசிசிஐ அதிகாரியுமான சஞ்சய் ஜக்தாலேவும் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் ஜக்தாலே, தான் எப்போது ஓய்வுபெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவிற்கு தோனி முதிர்ச்சியானவர். ஆனாலும் அணி தேர்வாளர்கள் தோனியின் மனதில் ஓய்வு குறித்து என்ன இருக்கிறது என்பதை நேரடியாக கேட்டு தெளிவுபெற வேண்டும். சச்சின் விவகாரத்தில் அப்படித்தான் நடந்தது. எனவே அதேபோல் தோனியிடமும் நேரடியாக கேட்டறிய வேண்டும். தோனி ஒரு சிறந்த வீரர். சுயநலமில்லாமல் அணியின் நலனுக்காக ஆடியவர். தற்போதைக்கு தோனிக்கு சரியான மாற்று விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இந்திய அணியில் இல்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios