2011 உலக கோப்பை இறுதி போட்டி ஃபிக்ஸிங் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையையடுத்து, அதுதொடர்பான விசாரணையில் 10 மணி நேரம் விளக்கமளித்துள்ளார் குமார் சங்கக்கரா.

2011 உலக கோப்பை இறுதி போட்டி மும்பையில் நடந்தது. அந்த இறுதி போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியும், சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. இறுதி போட்டியில் இலங்கை 275 ரன்கள் என்ற இலக்கை 49வது ஓவரில் எட்டி இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றது. 

இந்நிலையில், 9 ஆண்டுகள் கழித்து, அந்த இறுதி போட்டியில் இலங்கை தான் வெற்றி பெற்றிருக்க வேண்டியது என்றும், ஆனால் ஃபிக்ஸிங் செய்யப்பட்டதால் தான் இந்தியா வென்றது என்றும் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். 

முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டையடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சகம் காவல்துறையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இன்று(வியாழக்கிழமை) அந்த விசாரணையில் சங்கக்கரா கலந்துகொண்டு, 10 மணி நேரம் விசாரணை குழுவின் விசாரணைக்கு பதிலளித்தார். 10 மணி நேர விசாரணையும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது.