Asianet News TamilAsianet News Tamil

பொறுப்பற்றத்தனமா பேசுறாப்ள.. ஒரு கேப்டன் மாதிரி பதில் சொல்லலயே கோலி..! பாக்., முன்னாள் வீரர் கடும் தாக்கு

இஷாந்த் சர்மா குறித்த கேள்விக்கு இந்திய கேப்டன் விராட் கோலியின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த சல்மான் பட், அந்த கருத்தால் அதிருப்தியடைந்து விமர்சித்துள்ளார்.
 

salman butt reacts on virat kohli response to the question about rhythm of ishant sharma
Author
Leeds, First Published Aug 30, 2021, 4:47 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. 4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

கடைசி 2 டெஸ்ட் போட்டிகள், தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. 

இந்திய அணி 4வது டெஸ்ட்டில் ஒரு சில மாற்றங்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மாவின் பவுலிங் பெரிதாக எடுபடவில்லை. 3வது டெஸ்ட்டில் அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை இஷாந்த் சர்மா. எனவே இஷாந்த் சர்மாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் உள்ளன.

அதுமட்டுமல்லாது, இஷாந்த் சர்மாவின் ரன்னப்பே அவர் முழு ஃபிட்னெஸுடன் இல்லை என்பதை காட்டும் விதமாக இருந்தது. அவரது இயல்பான ரன்னப் இல்லாமல் சற்று தடுமாறினார்.

ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் இஷாந்த் சர்மா குறித்த கேள்விக்கு பதிலளித்த கேப்டன் விராட் கோலி, நான் ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கும்போது, கேட்ச்சை எதிர்நோக்கி பேட்ஸ்மேனைத்தான் பார்த்துக்கொண்டிருப்பேனே தவிர, அந்த நேரத்தில் பவுலர்களின் ரன்னப்பை எப்படி பார்க்கமுடியும் என்று கேள்வி எழுப்பினார்.

கோலியின் பதிலால் அதிருப்தியடைந்த சல்மான் பட், அதுகுறித்து பேசும்போது, இஷாந்த் சர்மா குறித்த கேள்விக்கு ஒரு கேப்டனாக விராட் கோலி அளித்த பதில் சரியல்ல. பவுலரின் ரன்னப்பை பார்க்க சில நொடிகள் கிடைக்கவில்லையா அவருக்கு? பவுலர் நல்ல ரிதமில் உள்ளாரா இல்லையா என்பதை கூட பார்க்கமுடியாதா? ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்யும்போது பேட்ஸ்மேனைத்தான் பார்ப்பேன் என்ற கோலியின் பதில் வினோதமாக இருக்கிறது.

அவர் பேசுவதை பார்க்கும்போது, இஷாந்த் சர்மாவை அணியிலிருந்து நீக்கும் ஐடியா இல்லை என்பது தெரிகிறது. ஆனால் பிட்ச்சின் தன்மையை பார்த்தபிறகு, அஷ்வினை சேர்த்து, 2 ஸ்பின்னர்களுடன் ஆட வாய்ப்புள்ளது என்றார் சல்மான் பட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios