Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND புஜாராவை தூக்கிட்டு அவரை ஆடவைக்கலாம்..! இந்திய அணிக்கு பாக்., முன்னாள் வீரரின் அட்வைஸ்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் புஜாராவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை சேர்க்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார்.
 

salman butt opines team india can replace pujara by suryakumar yadav
Author
London, First Published Aug 19, 2021, 10:07 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடிவருகிறது. முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். ஆனால் புஜாரா, கோலி, ரஹானே ஆகிய மூவரும் ஃபார்மில் இல்லாமல் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவந்தது இந்திய அணியை கடுமையாக பாதித்தது.

ஆனால் 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் இக்கட்டான நேரத்தில் சீனியர் வீரர்களான புஜாராவும் ரஹானேவும் பொறுப்புடன் ஆடி இந்திய அணியை காப்பாற்றினர். ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் அடித்தனர். அவர்கள் இருவரும் ஃபார்முக்கு வந்தது இந்திய அணிக்கு பாசிட்டிவான விஷயம்.

ரஹானேவாவது ஆஸி.,யில் மெல்போர்ன் டெஸ்ட்டில் சதமடித்தார். ஆனால் புஜாராவோ, 2019ம் ஆண்டுக்கு பிறகு சதமே அடிக்கவில்லை. ஆஸி., சுற்றுப்பயணம், இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய அனைத்து போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பினார்.

புஜாராவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்குமளவிற்கு மோசமாக ஆடினார். கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தான், 2வது டெஸ்ட்டில் நன்றாக ஆடினார்.

ஆனாலும் அவரது சொதப்பலான பேட்டிங் இந்திய அணிக்கு பாதிப்பாகவே அமையும். இந்நிலையில், புஜாராவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை சேர்க்கலாம் என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சல்மான் பட், புஜாரா திணறுகிறார். இங்கிலாந்து கண்டிஷனும் கடினமாக உள்ளது. இந்திய அணி தேவைப்பட்டால் புஜாராவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை ஆடவைக்கலாம். ஆனால் அது விராட் கோலியின் முடிவை பொறுத்தது என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios