இந்தியாவால் அதை பண்ண முடியும்;நம்மால் முடியுமா? சத்தியமா முடியாது! பாக்.,கிரிக்கெட்டுக்கு சல்மான் பட் சவுக்கடி
ஆசிய கோப்பையை இந்திய அணி தான் ஜெயிக்கும்; பாகிஸ்தானுக்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ள சல்மான் பட், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் மோதுகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்தவகையில், வரும் 28ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.
இதையும் படிங்க - ஒரு இடம் தான் இருக்கு.. இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கிடம் இடத்தை இழக்கும் ரிஷப் பண்ட்..?
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே தான் கடும் போட்டி நிலவும். இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ்கார்த்திக் என பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது.
ஆனால் அணியின் முன்னணி நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் ஆடவில்லை. புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய மூவரும் தான் ஆடுகின்றனர். இவர்களில் புவனேஷ்வர் குமார் மட்டும்தான் அனுபவ பவுலர். மற்ற இருவரும் இளம் பவுலர்கள். எனவே பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையுமா என்று பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில், அதுகுறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், இந்தியா கண்டிப்பாக ஜெயிக்கும். அவர்களுக்கு என்ன விட்டமின் குறைபாடா உள்ளது? என்று கேட்டு ஜோக் அடித்தார்.
இதையும் படிங்க - ZIM vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் புதிய 3ம் வரிசை வீரர்..! தரமான சாய்ஸ்
மேலும் தொடர்ந்து இதுகுறித்து பேசிய சல்மான் பட், இந்திய அணி அபாரமாக விளையாடிவருகிறது. இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் உள்ளனர். இந்திய அணியின் நிறைய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள். அதனால் தான் அனைவரும் இந்தியா தான் கோப்பையை வெல்லும் என கூறுகிறார்கள்.
பாகிஸ்தான் அணியில் அந்தளவிற்கு அதிகமான வீரர்கள் இல்லை. நிறைய வீரர்களை பாகிஸ்தான் உருவாக்குவதில்லை. பென்ச் வலிமை குறைவாக உள்ளது. பாபர் அசாம், ரிஸ்வான், ஷாஹீன் அஃப்ரிடி, ஃபகர் ஜமான் ஆகிய நால்வருக்கும் ஒருசேர பாகிஸ்தானால் ஓய்வளிக்க முடியாது என்ற நிதர்சனத்தை சல்மான் பட் எடுத்துரைத்துள்ளார்.