Asianet News TamilAsianet News Tamil

India vs Nepal:முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி: தேசிய கீதம் பாடும் போது ஆனந்த கண்ணீர் வடித்த சாய் கிஷோர்!

இந்திய அணியில் இடம் பெற்ற சாய் கிஷோர் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடும் நிலையில், தேசிய கீதம் பாடும் போது ஆனந்த கண்ணீர் வடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sai Kishore shed tears of joy while singing the national anthem during India vs Nepal, Quarter Final 1 in Asian Games at Hangzhou rsk
Author
First Published Oct 3, 2023, 10:47 AM IST

ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடந்து வருகிறது. இதில், மகளிர் மற்றும் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியும் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தங்கம் கைப்பற்றி சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது ஆண்களுக்கான டி20 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்தியா காலிறுதிப் போட்டியின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய முதல் காலிறுதிப் போட்டியில் நேபாள் அணிக்கு எதிரான முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 202 ரன்கள் குவித்தது.

IND vs NEP:ருத்ரதாண்டவம் ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் சதம் அடித்து சாதனை–டி20யில் இந்தியா 202 ரன்கள் குவிப்பு!

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்தப் போட்டியின் மூலமாக முதல் முறையாக இந்திய அணியில் இடம் பெற்ற ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கினார். போட்டிக்கு முன்னதாக பாடப்பட்ட தேசிய கீதத்தின் போது சாய் கிஷோர் கண்ணீர்விட்டு அழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தனது முதல் போட்டி என்பதால் ஆனந்த கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

சிங்கப்பூர் பெருமைகொள்கிறது.. 50 ஆண்டுகள் கழித்து முதல் தங்கம் - ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்திய சாந்தி!

அதன் பிறகு முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. இதில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி டி20 போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதுவும் ஆசிய விளையாட்டு போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உள்பட 100 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசி சாதனை படைத்தார்.

 

 

Cricket World Cup 2023: உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் ரோகித் சர்மா!

கடைசியாக ரிங்கு சிங் தனது அதிரடி ஆட்டத்தை காட்டவே இந்தியா எளிதாக 202 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் ரிங்கு சிங் 4, 6, 4, 1, 6, 2 என்று ரன்கள் குவித்தார். இறுதியாக ரிங்கு சிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ஷிவம் துபேவும் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.

ICC World Cup 2023: உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய 89 போட்டிகளில் எத்தனை வெற்றி?

கடின் இலக்கை துரத்திய நேபாள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios