IPL 2023: லக்னோ பவுலிங்கை அடி பிரித்து மேய்ந்த கில், சஹா..! கடின இலக்கை நிர்ணயித்த குஜராத் டைட்டன்ஸ்
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 227 ரன்களை குவித்து, 228 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அகமதாபாத்தில் நடந்துவரும் போட்டியில் இந்த சீசனில் வலுவான இரு அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் க்ருணல் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயத்தால் தொடரிலிருந்து விலகியதால் க்ருணல் பாண்டியா கேப்டன்சி செய்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
குயிண்டன் டி காக், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, கரன் ஷர்மா, க்ருணல் பாண்டியா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஸ்வப்னில் சிங், யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், மோசின் கான், ஆவேஷ் கான்.
IPL 2023: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், மோஹித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் ரிதிமான் சஹா இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்த சஹா, 43 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கில்லும் சஹாவும் இணைந்து 12 ஓவரில் 142 ரன்களை குவித்தனர். சஹா சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா
அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஷுப்மன் கில் 51 பந்தில் 7 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தும் கூட அவரால் சதமடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரது அதிரடியான அரைசதங்கள் மற்றும் டேவிட் மில்லரின் ஃபினிஷிங்கால்(12 பந்தில் 21 ரன்கள்) 20 ஓவரில் 227 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி 228 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயிக்க, அந்த அணி கடின இலக்கை விரட்டிவருகிறது.