உலக கோப்பை தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இரண்டாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இன்று நடக்கிறது. இந்த உலக கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், வில்லியம்சன், ஸ்மித், பேர்ஸ்டோ, டி காக், ஷாய் ஹோப், பாபர் அசாம் என பல சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர். பவுலர்களை பொறுத்தமட்டில் பும்ரா, ஆர்ச்சர், ரஷீத் கான், ரபாடா ஆகியோரின் மீது அதிக கவனம் உள்ளது. 

இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்கள் ஆடுவதை பார்க்க ஆவலாக இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் சச்சின், கங்குலி மற்றும் சேவாக் ஆகிய மூவரும் வர்ணனை செய்தனர். 

அப்போது சச்சினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இங்கிலாந்து அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆஃப்கானிஸ்தான் பவுலிங் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆகிய மூவரும் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்க ஆவலாக இருப்பதாக சச்சின் தெரிவித்தார்.