சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 70வது பிறந்ததினம் இன்று. ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானும், ரஜினிகாந்திற்கு நெருக்கமானவருமான சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்திற்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சச்சின் பதிவிட்ட டுவீட்டில்,  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.