இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், நடிகர் சூர்யா, ராம் சரண் ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டி20 தொடர் போன்று டி10 தொடரும் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. அபுதாபி டி10 லீக், ஐரோப்பியா கிரிக்கெட் லீக், லங்கா டி10 லீக், ஆப்பிரிக்கா டி10 லீக், ஜிம் ஆப்ரோ டி10, யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் என்று உலகம் முழுவதும் டி10 லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டி10 லீக் தற்போது இந்தியாவிலும் நடக்க இருக்கிறது.

Scroll to load tweet…

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற பெயரில் இந்த டி10 லீக் தொடர் நடத்தப்படுகிறது. இந்த டி10 தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது.

இதில், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் சூர்யா, ராம் சரண், அமிதாப் பச்சன் என்று அணியின் உரிமையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று தொடங்கிய தொடக்க நிகழ்ச்சியில் சச்சின், சூர்யா, ராம் சரண் ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசனான இன்று நடக்கும் முதல் போட்டியில் ஸ்ரீநகர் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2 தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், சோனிலைவ் ஆப் மற்றும் வெப்சைட்டிலும் லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது.

இன்று தொடங்கிய இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் வரும் 15 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்படுகிறது.