கிரிக்கெட்டில் அண்மைக்காலமாக பந்து ஸ்டம்பில் அடித்தும் ஸ்டிக் கீழே விழாததால் பவுலிங் அணி விக்கெட்டை பெறமுடியாமல் போன சம்பவங்கள் ஏராளமாக அரங்கேறியுள்ளன. 

பந்து ஸ்டம்பில் பட்டதும் ஸ்டிக் கீழே விழுந்தால்தான் ஐசிசி விதிப்படி அது அவுட்; ஸ்டிக் கீழே விழவில்லையெனில் அது அவுட்டில்லை. முன்பெல்லாம் பந்து ஸ்டம்பில் பட்டாலும் ஸ்டிக் கீழே விழாத சம்பவம் அரிதினும் அரிதாகத்தான் நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி நடக்கிறது. சர்வதேச போட்டிகளில் அண்மைக்காலத்தில் அடிக்கடி இவ்வாறு நடந்துள்ளது. 

பந்து ஸ்டம்பில் பட்டால், ஒன்று ஸ்டிக் கீழே விழும் அல்லது விழாமல் இருக்கும். இது இரண்டில் ஒன்றுதான் நடக்கும். ஸ்டிக் கீழே விழாமல் இருந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் ஸ்டிக் நகர்ந்து ஒரு ஸ்டம்பின் பேலன்ஸில் நின்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

கிளப் போட்டி ஒன்றில், பந்து ஸ்டம்பில் அடித்ததும் ஸ்டிக் நகர்ந்தது. ஆனால் கீழே விழாமல், ஒரேயொரு ஸ்டம்பின் பேலன்ஸில் நின்றது. ஸ்டிக் கீழே விழாததால் அதற்கு அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. அந்த வீடியோவை தனது நண்பர் பகிர்ந்ததாகக்கூறி, டுவிட்டரில் பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், இதற்கு நீங்கள் அம்பயராக இருந்தால் என்ன தீர்ப்பு கொடுத்திருப்பீர்கள் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.