ரஜினிக்கு பக்கத்தில் அமர்ந்த சச்சின் ; ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கிரிக்கெட் பிரபலங்கள்!

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் இந்திய கிரிக்கெட் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், மிதாலி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Sachin Tendulkar, Ravindra Jadeja, Anil Kumble, Venkatesh Prasad attend ayodhya ram mandir inauguration ceremony rsk

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ராமர் கோவில் பிரானா பிரதிஷ்டா நிகழ்வில் கலந்து கொள்ள ஆன்மீக பெரியோர்கள், கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் என்று அனைவரும் வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த மகா கும்பாஷேகத்தின் முக்கிய சடங்குகளை வாரணாசியின் பிரதான பூசாரி லக்ஷ்மி காந்த் தீட்சித் செய்ய உள்ளார்.

 

 

அயோத்தி நகரமே வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது. மங்கல இசையுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், ரவீந்திர ஜடேஜா, மிதாலி ராஜ் ஆகியோர் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ளனர். அயோத்தி விழாவிற்கு வருகை தந்த சச்சின், ரஜினிகாந்த், முகேஷ் அம்பானி ஆகியோர் அருகருகில் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், எம்.எஸ்.தோனி ஆகியோர் பலரும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

 

 

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios