2 கை இல்லாத மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைனுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் – வைரலாகும் வீடியோ!

இந்தியன் ஸ்டிரீட் பிரீமீயர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று தொடங்கிய நிலையில், அதில், 2 கையும் இல்லாத மாற்றுத்திறனாளியான சச்சின் தீவிர ரசிகர் அமீர் ஹூசைன் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து வந்து கௌரவப்படுத்தியுள்ளார்.

Sachin Tendulkar play with Differently abled Cricketer Amir Hussain in the Inauguration of ISPL 2024, Special Matches between Master 11 and Khiladi XI rsk

இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், அணியின் உரிமையாளர்களான சூர்யா, அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ராம் சரண் மற்றும் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோர் கலந்து கொண்டு முதல் சீசனை தொடங்கி வைத்தனர். தொடக்க விழாவில் சச்சின் டெண்டுல்கர், அக்‌ஷய் குமார், ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது.

 

 

இந்த நிலையில் தான் இந்த தொடக்க விழாவில் அமீர் ஹூசைன் லோனி மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து வந்த சச்சின் டெண்டுல்கர் அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார். சச்சின், அமீர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியிலும், அமீர் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்ட ஜெர்சியும் அணிந்து விளையாடினர். இன்று நடந்த சிறப்பு போட்டியில் கில்லாடி 11 மற்றும் மாஸ்டர்ஸ் 11 அணிகள் விளையாடின. இதில், சச்சின், அமீர், முனாப் படேல், யூசுப் பதான் சுரேஷ் ரெய்னா ஆகியோர் மாஸ்டர் அணிக்காக விளையாடினர்.

 

 

இதே போன்று அக்‌ஷய் குமார், நடிகர் சூர்யா, பிரவீன் குமார், ராபின் உத்தப்பா, இர்பான் பதான் ஆகியோர் மாஸ்டர்ஸ் 11 அணிக்காக விளையாடினர்.  தான் அணிந்திருந்த ஜெர்சியில் அமீர் என்ற பெயரிடப்பட்டுள்ளார். மேலும், அமீர் ஹூசைன் உடன் இணைந்து சிறப்பு போட்டியில் விளையாடவும் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மையில் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்த சச்சின் டெண்டுல்கர், அங்கு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரான அமீர் ஹூசைனை சந்தித்து பேசியுள்ளார். அவருக்கு தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றையும் பரிசாக வழங்கவும் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

 

 

இன்று ஐஎஸ்பிஎல் டி10 லீக் தொடருக்கு அமீர் ஹூசைனை அழைத்து வந்த சச்சின் அவருடன் பேட்டிங் செய்துள்ளார். சச்சின் பேட்டிங் செய்த போது அமீர் ஹூசைன் ரன்னர் திசையில் நின்றிருந்தார். மற்றொரு வீடியோவில் பேட்டிங் செய்த நடிகர் சூர்யாவிற்கு சச்சின் பவுலிங் செய்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரின் பிஜ்பெஹாராவில் உள்ள வகாமா கிராமத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் அமீர் ஹூசைன் லோனி. தற்போது 34 வயதாகும் அமீர் ஜம்மு காஷ்மீரின் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கிறார். இவரது அசாத்திய திறமை என்னவென்றால், இரண்டு கையும் இல்லை, ஆனாலும் கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை கிரிக்கெட் விளையாட தூண்டியது. எப்படி என்றால், தனது கழுத்தை பயன்படுத்தி கிரிக்கெட் பேட்டை பிடித்து அதனைக் கொண்டு பேட்டிங் செய்து வருகிறார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios