World Cup 2023: அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் சச்சின் நம்பர் 1, விக்கெட்டுகளில் மெக்ராத் முதலிடம்!

உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

Sachin Tendulkar No. 1 in the list of highest run scorers, McGrath tops the list of wickets in Cricket World Cup History rsk

உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே உலகக்கோப்பை தொடக்க விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், கேப்டன்ஸ் மீட்டிங் மட்டுமே நடந்துள்ளதால், ரசிகர்கள் பலரும் பிசிசிஐயை விமர்சனம் செய்து வருகின்றனர்.

World Cup 2023: 10 அணிகள் உலகக் கோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி?

அதுமட்டுமின்றி கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் இணைந்து நடத்தின. மேலும், 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடக்க விழாவை பகிர்ந்து இது போன்று நடத்த முடியாது என்று டுவிட்டர் மூலமாக விமர்சித்துள்ளனர்.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், இதுவரையில் நடந்த உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.

Asian Games 2023, India vs Nepal: சுரேஷ் ரெய்னா, சுப்மன் கில் சாதனையை முறியடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

அதிக ரன்:

உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் முன்னிலையில் உள்ளார். 

இவர், 45 போட்டியில், 6 சதம், 15 அரைசதம் உட்பட 2278 ரன் குவித்துள்ளார்.

‘டாப்-5’ பேட்ஸ்மேன்கள்

சச்சின் (இந்தியா) 45 போட்டிகளில் 6 சதம் உட்பட 2278 ரன்கள்

பாண்டிங் (ஆஸி.,) 46 போட்டிகளில் 5 சதம் உட்பட 1743 ரன்கள்

சங்ககரா (இலங்கை) 37 போட்டிகளில் 5 சதம் உட்பட 1532 ரன்கள்

லாரா (வெ.இ.,) 34 போட்டிகளில் 2 சதம் உட்பட 1225 ரன்கள்

டிவிலியர்ஸ் (தெ.ஆ.,) 23 போட்டிகளில் 4 சதம் உட்பட 1207 ரன்கள்

உலக கோப்பை அரங்கில் அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின், ரோகித் சர்மா முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

இருவரும் தலா 6 சதம் அடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் சங்ககரா தலா 5 சதத்தை பதிவு செய்துள்ளனர்.

World Cup 2023: உலகக் கோப்பைக்கான தொடக்க விழா ரத்து: கேப்டன்களின் அணிவகுப்பு மட்டுமே நடைபெற வாய்ப்பு?

அதிக விக்கெட்:

உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத், முன்னிலை வகிக்கிறார். இவர், 39 போட்டியில், 71 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 

இவ்வரிசையில் ‘டாப்-10’ பவுலர்கள்

மெக்ராத் (ஆஸி.,) 39 போட்டிகளில் 71 விக்கெட்கள்

முரளிதரன் (இலங்கை) 40 போட்டிகளில் 68 விக்கெட்கள்

மலிங்கா (இலங்கை) 29 போட்டிகளில் 56 விக்கெட்கள்

அக்ரம் (பாக்.,) 38 போட்டிகளில் 55 விக்கெட்கள்

ஸ்டார்க் (ஆஸி.,) 18 போட்டிகளில் 49 விக்கெட்கள்

வாஸ் (இலங்கை) 31 போட்டிகளில் 49 விக்கெட்கள்

ஜாகிர் (இந்தியா) 23 போட்டிகளில் 44 விக்கெட்கள்

ஸ்ரீநாத் (இந்தியா) 34 போட்டிகளில் 44 விக்கெட்கள்

தாகிர் (தெ.ஆ.,) 22 போட்டிகளில் 40 விக்கெட்கள்

பவுல்ட் (நியூசி.,) 19 போட்டிகளில் 39 விக்கெட்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios