டி20 உலக கோப்பையில் பும்ராவுக்கு நிகரான மற்றும் சரியான மாற்று வீரர் அவர்தான்..! வேற யாரும் சரியா வரமாட்டாங்க
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் காயத்தால் விலகிய ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது ஷமியைத்தான் எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சபா கரிம் கருத்து கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடவில்லை.
காயத்திலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஆடிய பும்ரா, முதுகுப்பகுதியில் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் டி20 உலக கோப்பையிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார்.
இதையும் படிங்க - பும்ராவின் காயத்திற்கு ரோஹித் மற்றும் டிராவிட் தான் காரணம்..?
பும்ரா காயத்திலிருந்து மீண்டுவர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்பதால் அவர் டி20 உலக கோப்பையில் ஆட வாய்ப்பே இல்லை. தென்னாப்பிரிக்க தொடருக்கான பும்ராவிற்கு மாற்று வீரராக முகமது சிராஜ் எடுக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பைக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் சபா கரிம், பும்ரா தனித்துவமான பவுலர். டி20 கிரிக்கெட்டில் புதிய பந்தில் சிறப்பாக வீசி விக்கெட் வீழ்த்துவது மட்டுமல்லாது டெத் ஓவர்களிலும் அருமையாக வீசி முடித்து கொடுப்பார். லீடர்ஷிப்பிலும் முக்கியமான வீரர் பும்ரா. பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பேரிழப்பு. அதேவேளையில், இந்திய அணி ஷமி, தீபக் சாஹர் மாதிரியான சிறந்த பவுலர்களை ஸ்டாண்ட்பை பவுலர்களாக எடுத்திருப்பதால் அவர்களை அணியில் எடுத்துக்கொள்ளும்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை வின்னர், ரன்னர், மற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? ஐசிசி அறிவிப்பு
என்னை பொறுத்தமட்டில் பும்ராவிற்கு மாற்று வீரராக ஷமியைத்தான் எடுக்க வேண்டும். இந்திய அணிக்காக ஆட கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அபாரமாக பந்துவீசக்கூடியவர் ஷமி. அனுபவம் வாய்ந்த பவுலரான ஷமி ஆஸ்திரேலியாவில் அசத்திவிடுவார். கடந்த ஐபிஎல்லில் அவர் எப்படி பந்துவீசினார் என்பதை பார்த்தோம். புதிய பந்தில் அருமையாக வீசி பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தக்கூடியவர். இலக்கை கட்டுப்படுத்தும்போதும் சிறப்பாக வீசக்கூடியவர் ஷமி என்று சபா கரிம் தெரிவித்துள்ளார்.