Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு..! சில பெரிய வீரர்கள் புறக்கணிப்பு

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் சபா கரீம் தேர்வு செய்துள்ளார்.
 

saba karim picks india squad for t20 world cup
Author
Chennai, First Published Sep 8, 2021, 4:29 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்று இரவு அறிவிக்கப்படுகிறது..

இந்நிலையில், 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் சபா கரீம் தேர்வு செய்துள்ளார். தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலி. இவர்கள் தவிர ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரையும், விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா; ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருடன் ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரை எடுத்துள்ள சபா கரீம், யுஸ்வேந்திர சாஹலை அணியில் எடுக்கவில்லை.

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா, தீபக் சாஹர் மற்றும் டி.நடராஜன் ஆகியோரை அணியில் எடுத்துள்ளார். ஸ்லோ டெலிவரிக்கள், துல்லியமான யார்க்கர்கள் என நல்ல வேரியேஷனை கொண்டிருப்பதால், டி.நடராஜனை தேர்வு செய்துள்ள சபா கரீம், ராகுல் சாஹர் நன்றாக பந்துவீசுவதுடன் நல்ல ஃபீல்டரும் கூட என்பதால் யுஸ்வேந்திர சாஹலை எடுக்காமல் ராகுல் சாஹரை எடுத்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் முழு ஃபிட்னெஸுடன் இல்லையென்றால், வருண் சக்கரவர்த்தியை பரிசீலிக்கலாம் என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.

ஷிகர் தவான், சாஹல், க்ருணல் பாண்டியா ஆகிய டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடிவந்த வீரர்களை சபா கரீம் புறக்கணித்துள்ளார்.

சபா கரீம் தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், பும்ரா, ஜடேஜா, ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios