டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் எடுக்கப்படாததில் வியப்பு எதுவும் இல்லை; அது தெரிந்த விஷயம் தான் என்று இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் தொடக்க வீரரான ஷிகர் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை. டி20 போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாக ரோஹித்துடன் ராகுல் தான் தொடக்க வீரராக இறங்கிவருகிறார்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை அதிரடியான தொடக்கம் அவசியம். அதை ரோஹித்துடன் இணைந்து ராகுல் சிறப்பாக செய்துவருகிறார். ஷிகர் தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடினாலும், டி20 கிரிக்கெட்டில் அவரைவிட சிறந்த அதிரடி தொடக்க வீரராக ராகுல் திகழ்வதால் ஷிகர் தவானுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

