Asianet News TamilAsianet News Tamil

விராட் கோலி ஐசிசி கோப்பையை இதுதான் சரியான சான்ஸ்..! முன்னாள் வீரர் கூறும் ஆலோசனை

விராட் கோலி ஐசிசி கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டுமென்று முன்னாள் வீரர் சபா கரீம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
 

saba karim advises how virat kohli lead indian team win icc tournaments
Author
Chennai, First Published Jul 6, 2021, 10:24 PM IST

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அணியாக கோலோச்சிவருகிறது.

விராட் கோலியும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துவருகிறார். உலகம் முழுதும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்தாலும், கோலி தலைமையில் இதுவரை ஒரு ஐசிசி டிராபி கூட ஜெயிக்காதது அவருக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி, 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் தோற்றது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்றது. 

ஐபிஎல்லில் விராட் கோலியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதே அவருக்கு ஏற்கனவே பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. இந்நிலையில், ஐசிசி தொடர்களிலும் தொடர்ச்சியாக முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோற்று கோப்பையை இழந்துவருகிறது இந்திய அணி.

கோலி இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக உருவெடுத்தாலும், ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை என்பது அவரது கேப்டன்சி மீதான அழுத்தத்தையும் நெருக்கடியையும் அதிகரிக்கிறது.

விராட் கோலி ஒரு கேப்டனாக, டி20 உலக கோப்பையை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்வது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சபா கரீம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு அடுத்தடுத்த உலக கோப்பைகளை வெல்ல அருமையான வாய்ப்பு. டி20 உலக கோப்பையை முதலில் வெற்றிகரமாக முடித்தால், அந்த நம்பிக்கையே அடுத்தடுத்து நடக்கவுள்ள உலக கோப்பைகளை வெல்ல உத்வேகமளிக்கும். 

உலக கோப்பையை வெல்வதற்கான வலுவான அணி, திறமை, ஆர்வ மிகுதி, இவையனைத்தையும் விட பெரும் ரசிகர் கூட்டத்தின் ஆதரவு என அனைத்துமே நம்மிடம் உள்ளது. சரியான திட்டங்களை வகுத்து, அதை திட்டமிட்டபடியே களத்தில் செயல்படுத்தினால் ஐசிசி கோப்பையை ஜெயிக்கலாம் என்று சபா கரீம் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios