SA20: வின்னர், ரன்னருக்கான பரிசுத்தொகை.. விருதுகளை வென்றவர்களின் பட்டியல்

தென்னாப்பிரிக்கா டி20 லீக் வின்னர், ரன்னருக்கான பரிசுத்தொகை மற்றும் இந்த சீசனில் சிறப்பாக ஆடி விருதுகளை வென்ற வீரர்களின் விவரங்களை பார்ப்போம்.
 

sa20 list of all awards and prize money of winner and runner

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரின் முதல் சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. எம்.ஐ கேப்டவுன், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பிரிட்டோரியா கேபிடள்ஸ், பார்ல் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 6 அணிகளும் ஆடின.

இதில் பிரிட்டோரியா கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் அபாரமாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேபிடள்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கோப்பையை வென்றது. 

WPL 2023 Auction: இந்தியா, ஆஸி., வீராங்கனைகளுக்கு அதிக கிராக்கி! இங்கி., ஆல்ரவுண்டருக்கு 2வது அதிகபட்ச தொகை

அறிமுக சீசனில் கோப்பையை வென்று சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாதனை படைத்தது. டைட்டில் வின்னர், ரன்னருக்கான பரிசுத்தொகை மற்றும் இந்த சீசனில் சிறப்பாக ஆடி விருதுகளை வென்ற வீரர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை விவரங்களை பார்ப்போம்.

1. சாம்பியன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ரூ.16.17 கோடி

2. ரன்னர் - பிரிட்டோரியா கேபிடள்ஸ் - ரூ.8.8 கோடி

3. ஃபைனல் ஆட்டநாயகன் - வாண்டர் மெர்வி (சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்) - ரூ.4.62 லட்சம்

4. சீசனினி ஸ்பிரிட் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ரூ.4.62 லட்சம்

5. ரைஸிங் ஸ்டார் - ஈதன் பாஷ் (பிரிட்டோரியா கேபிடள்ஸ்) - ரூ.4.62 லட்சம்

6. சீசனின் சிறந்த பேட்ஸ்மேன் - ஜோஸ் பட்லர் (பார்ல் ராயல்ஸ்) - ரூ.9.23 லட்சம்

WPL 2023 Auction Live: இந்தியா, ஆஸி., வீராங்கனைகளுக்கு அதிக கிராக்கி

7. சீசனின் சிறந்த பவுலர் - வாண்டர் மெர்வி (சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்) - ரூ.9.23 லட்சம்

8. தொடர் நாயகன் - எய்டன் மார்க்ரம் (சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்) - ரூ.16.14 லட்சம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios