ஐபிஎல் 2025 கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து AI தளங்களான Grok, Gemini, ChatGPT ஆகியவை கணித்துள்ளன.

IPL 2025 Final Winner Prediction: RCB or PBKS? AI Platforms Pick THIS Team: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. பல ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பைக்காக ஏங்கித் தவிக்கும் ஆர்சிபி இந்த முறை எந்த ஏக்கத்தை தீர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல் இதுவரை கோப்பையை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் கோப்பையை கையில் ஏந்துமா? என்ற எதிர்பார்ப்பும் எகிற வைத்துள்ளது.

ஐபிஎல் 2024 பைனல் கணிப்பு

இந்நிலையில், க்ரோக் (Grok), ஜெமினி (Gemini), மற்றும் சாட்ஜிபிடி (ChatGPT) ஆகிய AI தளங்கள் ஒருசேர ஆர்சிபி அணி ஐபிஎல் 2025 கோப்பையை வெல்லும் என கணித்துள்ளன.

க்ரோக் (Grok) கணிப்பு: கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில் RCB முன்னிலை பெறுகிறது. ஏனெனில் குவாலிஃபையர் 1 இல் PBKS அணியை 101 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, 60 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கைத் துரத்தி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. ஜோஷ் ஹேசில்வுட் (11 போட்டிகளில் 21 விக்கெட்டுகள்) மற்றும் சுயாஷ் சர்மா தலைமையிலான ஆர்சிபி அணியின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது.

அதே நேரத்தில் விராட் கோலி (55.81 சராசரியில் 614 ரன்கள்) மற்றும் பில் சால்ட்டின் அதிரடியான ஃபார்ம் ஆகியோரின் பேட்டிங் சிறந்த நிலையில் உள்ளது. இதுமட்டுமின்றி உயர் அழுத்த சூழ்நிலைகளைக் கையாளும் திறன் ஆகியவை அவர்களுக்கு ஒரு நன்மையைத் தருகின்றன.

ஆர்சிபி அணியே வெல்லும்

இருப்பினும், குவாலிஃபையர் 2 இல் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரின் ஆட்டமிழக்காத 87 ரன்களால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 203 ரன்களைத் துரத்தி, மீள்தன்மையைக் காட்டியது. மேலும் ஆர்சிபி திரடி வீரர்களை கட்டுப்படுத்தும் கைல் ஜேமிசன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோரின் பந்துவீச்சு ஆற்றலையும் பஞ்சாப் கொண்டுள்ளது. 

இருப்பினும், ஆர்சிபிக்கு எதிரான அவர்களின் முந்தைய சரிவு அழுத்தத்தின் கீழ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. RCB-யின் தற்போதைய ஃபார்ம், சமநிலையான அணி மற்றும் வேகத்தைக் கருத்தில் கொண்டு, 2025 IPL இறுதிப் போட்டியில் Royal Challengers பெங்களூரு வெற்றி பெறும்.

ஜெமினி (Gemini) கணிப்பு: தங்கள் முதல் IPL கோப்பையை வெல்ல ஆர்வமுள்ள இரண்டு அணிகளுக்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டி இது. இந்த சீசனில் சமீபத்திய போட்டிகள் மற்றும் அவர்களின் தகுதிச் சுற்று செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு RCB சற்று முன்னிலை பெற்றிருக்கலாம். ஆனாலும் பஞ்சாப் கிங்ஸ் கம்பேக் கொடுத்துள்ளது. ஆனாலும் முடிவு அன்றைய செயல்திறனைப் பொறுத்தது.

மேலும் டாஸ் மற்றும் சாத்தியமான வானிலை இடையூறுகள் போன்ற காரணிகளும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம். ஆனாலும் நான் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நான் ஐபிஎல் 2025 கோப்பை Royal Challengers Bangalore (RCB) பக்கம் சற்று சாய்ந்திருக்கலாம் என ஜெமினி கணித்துள்ளது.

சாட்ஜிபிடி (ChatGPT) கணிப்பு: இந்த சீசனில் PBKS அணிக்கு எதிரான முந்தைய வெற்றிகள், குவாலிஃபையர் 1ல் பெற்ற தீர்க்கமான வெற்றி உட்பட, RCB அணி தொடர்ச்சியான ஃபார்மையும், இறுதிப் போட்டியில் வெல்ல ஆர்சிபி தான் விருப்பமான அணியாக கருதப்படுகிறது. இருப்பினும், PBKS அணியின் சமீபத்திய செயல்பாடுகளும், ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையும் குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்தக்கூடும்.