Asianet News TamilAsianet News Tamil

RCBW vs UPW: முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்ற ஆர்சிபி – 2 ரன்னில் தோற்ற யுபி வாரியர்ஸ்!

ஆர்சிபி அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியானது கடைசி வரை போராடி 2 ரன்களில் தோல்வி அடைந்துள்ளது.

Royal Challengers Bangalore Women beat UP Warriorz by 2 runs difference in WPL 2nd Match at Bengaluru
Author
First Published Feb 24, 2024, 11:29 PM IST

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் நேற்று தொடங்கியது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2ஆவது போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், சப்பினேனி மேகனா 44 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதே போன்று விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ் 37 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது.

பின்னர் 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு யுபி வாரியர்ஸ் அணி விளையாடியது. இதில், கேப்டன் அலீசா ஹீலி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். விருந்தா தினேஷ் 18 ரன்களில் ஷோபனா ஆஷா பந்தில் ஆட்டமிழந்தார். தஹிலா மெக்ராத் 22 ரன்னிலும், கிரேஸ் ஹாரிஸ் 38 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருவரும் ஆஷா பந்தில் கிளீன் போல்டானார்கள்.

அடுத்து வந்த கிரன் நவ்கிரே ஒரு ரன்னில் ஷோபனா ஆஷா பந்தில் நடையை கட்டினார். இதன் மூலமாக இந்த சீசனில் 2ஆவது போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஷா சாதனை படைத்துள்ளார். 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். கடைசியாக பூனம் கேம்னர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக யுபி வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. தீப்தி ஷர்மா மற்றும் ஷோஃபி எக்லெஸ்டோன் இருவரும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை ஷோஃபி மோலினெக்ஸ் வீசினார். முதல் பந்தில் 1 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் 2ஆவது பந்திலும் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 3 மற்றும் 4ஆவது பந்தில் ரன்கள் எடுக்கப்படவில்லை. 5ஆவது பந்தில் தீப்தி சர்மா பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

நேற்றைய போட்டியைப் போன்று சிக்ஸர் அடித்தால் யுபி வாரியர்ஸ் வெற்றி பெறும், பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் நடைபெறும். இதுவரையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சூப்பர் ஓவர் நடைபெறவில்லை. கடைசியாக 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில், ஆர்சிபி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுபி வாரியர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்களில் தோல்வி அடைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி வெற்றியை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios