நியூசிலாந்து அணியில் கடந்த 2006ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் டெய்லர், அந்த அணியின் சீனியர் வீரராவார். 14 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக ஆடிவருகிறார். 

இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடரில், டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக பேட்டிங் ஆடினாலும், அவரால் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை. ஆனால், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி அந்த அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து தொடரை வெல்வதற்கு காரணமாக திகழ்ந்தார் டெய்லர். அதனால் தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

இந்நிலையில், அடுத்ததாக டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக ஆடி நியூசிலாந்து அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார் டெய்லர். இந்தியாவுக்கு எதிரான அந்த போட்டியில் ஆடுவதன் மூலம் வரலாற்று சாதனை படைக்கவும் காத்திருக்கிறார். 

Also Read - தாதா, இப்ப நீங்க பிசிசிஐ தலைவர்.. கொஞ்சமாவது ப்ரொஃபசனலா இருங்க.. யுவராஜின் கிண்டலான கோரிக்கை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி. அதில் ஆடுவதன்மூலம் மூன்றுவிதமான(டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) ஃபார்மட்டிலும் 100 போட்டிகளை ஆடிய முதல் வீரர் என்ற சாதனையை படைக்கப்போகிறார். இதற்கு முன்னர் எந்த வீரரும் இந்த மைல்கல்லை எட்டவில்லை. 

டெய்லர் இதுவரை 231 ஒருநாள் போட்டிகளிலும் 100 டி20 போட்டிகளிலும் 99 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார். எனவே இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட், அவாது 100வது டெஸ்ட். அதில் ஆடுவதன்மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவிதமான ஃபார்மட்டிலும் 100 போட்டிகளில் ஆடிய வீரர் என்ற சாதனையை படைக்கவுள்ளார். 

Also Read - ஐபிஎல்லுக்கு பிறகு டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ள அதிரடி வீரர்