நியூசிலாந்து அணியில் கடந்த 2006ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் டெய்லர், அந்த அணியின் சீனியர் வீரராவார். 14 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக ஆடிவருகிறார். 

இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடரில், டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக பேட்டிங் ஆடினாலும், அவரால் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க முடியவில்லை. ஆனால், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி அந்த அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து தொடரை வெல்வதற்கு காரணமாக திகழ்ந்தார் டெய்லர். அதனால் தொடர் நாயகன் விருதையும் வென்றார். 

டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை அடுத்து, டெஸ்ட் தொடர் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இந்த போட்டி ரோஸ் டெய்லருக்கு 100வது டெஸ்ட் போட்டி.  எனவே இதன்மூலம் மூன்றுவிதமான(டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) ஃபார்மட்டிலும் 100 போட்டிகளை ஆடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோஸ் டெய்லர். 

டெய்லர் இதுவரை 231 ஒருநாள் போட்டிகளிலும் 100 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். இந்த டெஸ்ட் போட்டி டெய்லருக்கு 100வது டெஸ்ட் போட்டி. எனவே டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று விதமான கிரிக்கெட்டிலும் 100 சர்வதேச போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை ரோஸ் டெய்லர் படைத்துள்ளார். 

நியூசிலாந்து அணிக்காக 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை ரோஸ் டெய்லருக்கு முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன், இரு நாட்டு வீரர்களும் தங்களது தேசிய கீதங்களை பாடுவது வழக்கம்.

Also Read - கோலி, புஜாரா சொதப்பல்.. முதல் டெஸ்ட்டில் மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்.. நங்கூரம் போட்ட ரஹானே

தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதையொட்டி, தேசிய கீதத்திற்காக களத்திற்கு வரும்போது தனது குழந்தைகளுடன் வந்து தேசிய கீதத்தை பாடினார் ரோஸ் டெய்லர்.