Asianet News TamilAsianet News Tamil

நான் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரானால்.. செம ஸ்மார்ட்டுங்க நம்ம ரோஹித்

ஒருகாலத்தில் சிறந்த அணியாக திகழ்ந்த பாகிஸ்தான், இன்று படுமோசமாக உள்ளது. 
 

rohit sharmas smart answer to a question about pakistan
Author
England, First Published Jun 17, 2019, 3:49 PM IST

மான்செஸ்டரில் நேற்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் அபாரமாக ஆடினர். ராகுல் அரைசதம் அடித்து அவுட்டானார். ஆனால் ரோஹித் சர்மா வழக்கம்போல தனது இன்னிங்ஸை பெரிதாக மாற்றினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 24வது சதத்தை அடித்த ரோஹித், 140 ரன்கள் குவித்தார். ரோஹித், கோலி, ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 336 ரன்களை குவித்தது. 

337 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி, 40 ஓவர் முடிவில் 212 ரன்களை எடுத்து டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணி எப்போதுமே ஃபீல்டிங்கில் மொக்கைதான். அந்த அணியின் பலமே பவுலிங் தான். ஆனால் நேற்றைய போட்டியில் அதிலும் சொதப்பியது. கடைசி 5-6 ஓவர்களை நன்றாக வீசி இந்திய அணியின் ஸ்கோரை ஓரளவிற்கு குறைத்தனர். 

rohit sharmas smart answer to a question about pakistan

ஆனால் பேட்டிங்  மற்றும் ஃபீல்டிங் ரொம்ப மோசம். ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் ஆகிய டாப் 3 பேட்ஸ்மேன்களை தவிர மிடில் ஆர்டரில் ஹஃபீஸ் மட்டுமே நன்றாக் ஆடுகிறார். சர்ஃபராஸ், ஷோயப் மாலிக் உள்ளிட்ட மற்ற மிடில் ஆர்டர்கள் அனைவருமே சொதப்புகின்றனர். ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி படுமோசமாக சொதப்பிவருகிறது. ஒருகாலத்தில் சிறந்த அணியாக திகழ்ந்த பாகிஸ்தான், இன்று படுமோசமாக உள்ளது. 

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மாவிடம், தொடர்ந்து சொதப்பிவரும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு அவர்களின் சிக்கலிலிருந்து மீள, ஒரு வீரராக நீங்கள் என்ன ஆலோசனை வழங்குவீர்கள்..? என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். 

rohit sharmas smart answer to a question about pakistan

அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, நான் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரனால், அப்போது சொல்கிறேன் என்று சாமர்த்தியாக யாரும் எதிர்பாராத வகையில் ஸ்மார்ட்டாக பதிலளித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios