Asianet News TamilAsianet News Tamil

இது லிஸ்ட்லயே இல்லயே..! கோலியின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த ரோஹித்

டெஸ்ட் அணி கேப்டன்சியிலிருந்து விராட் கோலி திடீரென விலகிய முடிவால் ரோஹித் சர்மா அதிர்ச்சியடைந்துள்ளார்.
 

rohit sharma shocked because of virat kohlis sudden decision to quit test captaincy
Author
Chennai, First Published Jan 16, 2022, 8:30 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து தன்னை நீக்கியதால் அதிருப்தியில் இருந்த விராட் கோலி, திடீரென டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார். டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை ஒருநாளைக்கு முன்பாகவே அணி வீரர்களிடம் விராட் கோலி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் பொதுவெளியை பொறுத்தமட்டில், அவரது கேப்டன்சி விலகல் ஒரு அதிர்ச்சியான சம்பவம் தான். அந்தவகையில், விராட் கோலியின் முடிவு ரோஹித் சர்மாவையும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரோஹித் சர்மா, அதிர்ச்சி.. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்ததற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

விராட் கோலிக்கு பிறகு இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோஹித் சர்மா தான், டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios