T20 World Cup: கோலி - ராகுல் இவர்களில் யார் தனது ஓபனிங் பார்ட்னர்..? கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்
டி20 உலக கோப்பையில் தன்னுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது கோலியா ராகுலா என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருக்கிறார்.

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் யாருக்கு ஆடும் லெவனில் இடம்..? கௌதம் கம்பீர் கருத்து
அந்தவகையில், அண்மையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஓபனிங்கில் இறங்கி விராட் கோலி சதமடித்தது, அவரையே ரோஹித்துடன் ஓபனிங்கில் இறக்கலாம் என்ற கருத்து வலுத்துவருகிறது.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விராட் கோலி ஓபனிங்கில் அபாரமாக விளையாடியிருப்பதால் தான் இந்த வலியுறுத்தல் வலுக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் கோலியை ஓபனிங்கில் இறக்கலாம் என்று கருத்து கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா மௌனம் கலைத்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் நாளை மறுநாள்(20ம் தேதி) தொடங்கவுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார் ரோஹித் சர்மா.
இதையும் படிங்க - கொரோனா காரணமாக ஆஸி., டி20 தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி..! மாற்று வீரராக சீனியர் பவுலர் அறிவிப்பு
அப்போது தனது ஓபனிங் பார்ட்னர் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி எங்களது 3வது ஓபனின் ஆப்சன். ஒருசில போட்டிகளில் அவர் ஓபனிங்கில் ஆடுவார். ஆனால் டி20 உலக கோப்பையில் எங்களது முதல் ஓபனிங் சாய்ஸ் கேஎல் ராகுல். அவரது சிறப்பான ஆட்டங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. அவர் இந்திய அணியின் முக்கியமான வீரர் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.