டி20 உலக கோப்பை: ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் யாருக்கு ஆடும் லெவனில் இடம்..? கௌதம் கம்பீர் கருத்து
டி20 உலக கோப்பையில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் இந்திய அணியின் ஆடும் லெவனில் யாருக்கு இடம் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார்.
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள நிலையில், அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் மற்றும் 4 ஸ்டாண்ட்பை வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
ஸ்டாண்ட்பை வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
இதையும் படிங்க - ரமீஸ் ராஜாவுக்கு புடிக்கும்னு அந்த பையனைலாம் டீம்ல எடுத்து வச்சுருக்காங்க! பாக்., அணியை விளாசிய முன்னாள் வீரர்
இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது. ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஆகிய 5 பேட்டிங் ஆர்டர்கள் உறுதி. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யார் ஆடுவார் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில், ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே ஆட வாய்ப்புள்ளதா என்பது குறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், ரிஷப் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையும் சேர்த்து ஆடவைக்க முடியாது. அப்படி செய்தால் 6வது பவுலிங் ஆப்சன் இல்லாமல் போகும். உலக கோப்பை மாதிரியான பெரிய தொடருக்கு 6வது பவுலிங் ஆப்சன் இல்லாமல் போகக்கூடாது. சூர்யகுமார், ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை உட்காரவைத்துவிட்டு ரிஷப்பை தொடக்க வீரராக இறக்கினால், ரிஷப் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே ஆடும் லெவனில் இடம்பெறலாம். ஆனால் அவர்களை நீக்கமுடியாது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை ஜெயிக்கணும்னா, அந்த ஒரு அணியை இந்தியா வீழ்த்தியே ஆகணும்..! கௌதம் கம்பீர் அதிரடி
தினேஷ் கார்த்திக் கடைசி சில ஓவர்களில் மட்டுமே ஆடுகிறார். வெறும் 10-12 பந்துகள் பேட்டிங் ஆடுவதற்காக ஒரு பிளேயரை எடுக்க முடியாது. அவர் மேல்வரிசையில் இறங்க விரும்புவதில்லை. ஆனால் ரிஷப் பண்ட்டை எந்த வரிசையிலும் இறக்கலாம். என்னை பொறுத்தமட்டில் ரிஷப் பண்ட் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருக்கவேண்டும். அவர் ஒருவர் தான் இடது கை பேட்ஸ்மேன்; அதனால் அணியில் இடம்பெறவேண்டும் என்றெல்லாம் இல்லை. போட்டியை ஜெயித்து கொடுக்கவல்ல வீரர் ரிஷப் பண்ட். எனவே அவர்தான் ஆடவேண்டும் என்று கம்பீர் கருத்து கூறியுள்ளார்.