ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டனான ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய செய்த சாதனைகளின் பட்டியலை பார்ப்போம்.

1. அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் (4 முறை)

ஐபிஎல்லில் 4 முறை கோப்பையை வென்ற ஒரே கேப்டன் ரோஹித் சர்மா தான். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய 4 சீசன்களில் டைட்டிலை வென்று கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா. மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலுமே ரோஹித் சர்மா அபாரமாக ஆடி ஸ்கோர் செய்து, அணியை முன்னின்று வழிநடத்தினார். 2013, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஐபிஎல் சீசன்களில் முறையே 538, 482, 333 மற்றும் 405 ரன்களை குவித்துள்ளார்.

2. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 143 போட்டிகளில் ஆடி 31.86 என்ற சராசரியுடன் 3728 ரன்களை குவித்துள்ளார் ரோஹித் சர்மா. 28 அரைசங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் ரோஹித் சர்மா தான். ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் பொல்லார்டு(2755 ரன்கள்) உள்ளார்.

3. அதிக அரைசதங்கள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி 28 அரைசதங்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, அதிக அரைசதங்கள் விளாசிய மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 2016 ஐபிஎல்லில் மட்டுமே ஐந்து அரைசதங்களை அடித்தார். கடந்த 2 சீசன்கள் ரோஹித் சர்மாவுக்கு சரியாக அமையவில்லை. ஐபிஎல்லில் மொத்தமாக 36 அரைசதங்களை அடித்துள்ள ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 28 அரைசதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

4. அதிக கேட்ச்கள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியதில் இதுவரை 59  கேட்ச்களை பிடித்துள்ள ரோஹித் சர்மா, ஒரே இன்னிங்ஸில் அதிக கேட்ச்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 2016 ஐபிஎல்லில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 கேட்ச்களை பிடித்தார்.