உலக கோப்பையில் அரையிறுதியில் வெளியேறியதுதான் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. உலக கோப்பைக்கு பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தொடர், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களை தொடர்ச்சியாக வென்றது இந்திய அணி. 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களையும் வென்றது. டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து தொடர்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. Also Read - ஷர்துல் தாகூரிடம் ஒரே ஒரு விஷயம்தான் சொன்னேன்.. வெற்றிக்கு பின் ஜடேஜா அதிரடி

இந்நிலையில், அடுத்ததாக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அந்த தொடருக்கான இந்திய அணி மற்றும் அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. 

இலங்கை அணிக்கு எதிரான தொடர் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 5, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முறையே கவுஹாத்தி, இந்தூர் மற்றும் புனே ஆகிய இடங்களில் மூன்று டி20 போட்டிகள் நடக்கவுள்ளன. Also Read - அடுத்த புரட்சிக்கு தயாரான தாதா.. ஐசிசி-யையே அலறவிடும் கங்குலி

இந்த தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மா 2019ம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக ஆடியிருக்கிறார். ஓய்வே இல்லாமல் கிட்டத்தட்ட அனைத்து தொடர்களிலும் ஆடியது ரோஹித் சர்மா தான். எனவே இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட உள்ளது.