Asianet News TamilAsianet News Tamil

ஷர்துல் தாகூரிடம் ஒரே ஒரு விஷயம்தான் சொன்னேன்.. வெற்றிக்கு பின் ஜடேஜா அதிரடி

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், 316 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டன் கோலி, வெற்றிக்கு அருகில் இந்திய அணி இருந்தபோது ஆட்டமிழந்தார். இதையடுத்து அந்த நெருக்கடியான சூழலில் பேட்டிங் ஆட வந்தார் ஷர்துல் தாகூர். 

jadeja reveals what he says to shardul thakur in pressure situation in last odi against west indies
Author
Cuttack, First Published Dec 23, 2019, 1:24 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி  2-1 என ஒருநாள் தொடரை வென்றது. 
 
கட்டாக்கில் நடந்த கடைசி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 315 ரன்களை குவித்து 316 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் இணைந்து அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, ஒருமுனையில் விராட் கோலி நிலைத்து நிற்க, மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ் ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கோலி மீதான அழுத்தம் அதிகமானது. ஆனாலும் வழக்கம்போலவே அந்த அழுத்தத்தை சிறப்பாக கையாண்ட சேஸிங் மாஸ்டர் விராட் கோலி, தேவையான ரன்ரேட் அதிகமாகிவிடாமல், சீரான வேகத்தில் ஸ்கோரும் செய்துகொண்டு, தனது விக்கெட்டையும் இழந்துவிடாமல் சிறப்பாக ஆடினார்.

jadeja reveals what he says to shardul thakur in pressure situation in last odi against west indies

வழக்கமாக இதுபோன்ற போட்டிகளை கடைசி வரை நின்று ஜெயித்து கொடுக்கும் கோலி, நேற்று அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும் ஜடேஜா களத்தில் செட்டில் ஆகியிருந்ததால், கோலி சற்று தைரியத்துடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷர்துல் தாகூர் பயமோ பதற்றமோ அடையாமல், பெரிய ஷாட்டுகளை ஆடினார். இதையடுத்து ஜடேஜாவும் ஷர்துல் தாகூரும் இணைந்து 49வது ஓவரிலேயே இலக்கை எட்டினர். இதையடுத்து இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Also Read - இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் அபாரம்.. ஜடேஜா - ஷர்துல் தாகூரின் துணிச்சலான பேட்டிங்.. வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

கோலி அவுட்டானதும் அனைவரையும் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனால் 4 ஓவரில் 30 ரன்கள் தேவை என்பதால், பதற்றம் ஒருபுறம் இருந்தாலும், ரசிகர்களிடத்தில் நம்பிக்கையும் அதிகமாக இருந்தது. ஏனெனில் ஜடேஜா களத்தில் செட்டில் ஆகியிருந்தார். 

jadeja reveals what he says to shardul thakur in pressure situation in last odi against west indies

அதேபோலவே ஜடேஜா அவசரப்படாமல் கடைசிவரை நிதானமாக ஆட, ஷர்துல் தாகூர் சிக்ஸரையும் பவுண்டரியையும் விளாசி வெற்றியை எளிதாக்கி கொடுத்தார். இந்நிலையில், ஷர்துல் தாகூர் களத்திற்கு வந்ததும் அவரிடம் பேசியது குறித்து ஜடேஜா கருத்து தெரிவித்தார். போட்டிக்கு பின்னர் இதுகுறித்து பேசிய ஜடேஜா, ஆடுகளம் நன்றாக இருக்கிறது. பந்து அருமையாக பேட்டிற்கு வருகிறது. எனவே ஷாட் செலக்‌ஷனில் கவனமாக இருக்க வேண்டும். மோசமான ஷாட்டுகளையோ, பெரிதாக அடித்து ஆட வேண்டும் என்ற அவசியமோ இல்லை. பந்தை சரியாக டைமிங் செய்தால் போதும் என்று கூறினேன் என்று ஜடேஜா தெரிவித்தார்.

Also Read - ஜெயசூரியாவின் 22 ஆண்டுகால ரெக்கார்டை தகர்த்தெறிந்த ரோஹித் சர்மா

மேலும் இந்த தொடரில் நான் அதிகமாக பேட்டிங் ஆடவில்லை. இதில் வெற்றி பெற்றால்தான் தொடரை வெல்ல முடியும் என்பதால் என் மீது அழுத்தம் இருந்தது. ஆனால் விராட் என்னிடம், எனது இயல்பான ஆட்டத்தை ஆட சொன்னார். அதன்படி செயல்பட்டேன் என்று ஜடேஜா கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios