தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபி கைப்பற்றிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா பார்படாஸில் மண், புல்லை திண்றது ஏன் என்பதற்கான விளக்கம் கொடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியது. டிராபியை இழந்த தென் ஆப்பிரிக்கா பார்படாஸிலிருந்து புறப்பட்டு நாடு திரும்பியது. ஆனால், டிராபியை வென்ற இந்திய அணி வீரர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை. பார்படாஸில் பெரில் புயல் தாக்கம் ஏற்பட்ட நிலையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் இதுவரையில் நாடு திரும்பவில்லை. இன்று இரவு அவர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்திய அணிக்கு டிராபியை வென்று கொடுத்த பார்படாஸ் மண்ணுக்கு மரியாதை அளிக்கும் வகையில் ரோகித் சர்மா புல் மற்றும் மண்ணை தின்றார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது குறித்து விளக்கம் கொடுத்து ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: அது கதை அல்ல. அது என்னுடைய உள்ளுணர்வு. அதனை என்னால் விவரிக்க முடியாது. அந்த தருணத்தில் நான் பிட்ச் அருகில் சென்று அதனை உணர்ந்தேன். இந்த பிட்சு தான் உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்தது. எனது வாழ்நாள் முழுவதும் அந்த மைதானத்தை ஒரு போதும் மறக்கமாட்டேன். இந்தியர்களது கனவு நனவான இடத்தின் ஒரு பகுதி என்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நான் மண், புல்லை சாப்பிட்டேன் என்று கூறியுள்ளார்.

Scroll to load tweet…