Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ: ரோஹித் - கில் அதிரடி அரைசதம்.. இந்திய அணிக்கு அபாரமான தொடக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடிக்க, இந்திய அணிக்கு அபாரமான தொடக்கம் கிடைத்துள்ளது.
 

rohit sharma and shubman gill half century set super basement for team india for mega score in third odi against new zealand
Author
First Published Jan 24, 2023, 2:30 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடந்துவருகிறது. 

இந்திய நேரப்படி  பிற்பகல் 1 மணிக்கு டாஸ் போடப்பட்டு 1.30க்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் நீக்கப்பட்டு யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு கேப்டன்கள்..! மௌனம் கலைத்த ராகுல் டிராவிட்

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்.  

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் லேதம் (கேப்டன், விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர், ஜேகப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், பிளைர் டிக்னெர்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். இருவருமே அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்தவும் முடியாமல், ரோஹித் - கில் தொடக்க ஜோடியை பிரிக்கவும் முடியாமல் நியூசிலாந்து அணி திணற, இந்திய அணிக்கு அபாரமான தொடக்கம் கிடைத்துள்ளது. 

பெரிய தவறு செய்தும் ஐசிசி தண்டனையிலிருந்து இஷான் கிஷன் தப்பியது எப்படி..?

ஷுப்மன் கில் முதலில் அரைசதம் அடிக்க, அவரைத்தொடர்ந்து ரோஹித் சர்மா 41 பந்தில் அரைசதம் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 49வது அரைசதம் இதுவாகும். முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து ரோஹித்தும் கில்லும் ஆடிவருகின்றனர்.  இந்தூர் மைதானம் பெரிய ஸ்கோர் அடிக்கக்கூடிய மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் சராசரி ஸ்கோரே 300 ரன்களுக்கு அதிகமாகும். இந்த இன்னிங்ஸிலும் அதை விட பெரிய ஸ்கோரை எட்டும்பொருட்டு இந்திய வீரர்கள் ஆடிவருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios