சிட்னி டெஸ்டில் கெத்து காட்டிய ரிஷப் பண்ட்: சிக்ஸர், பவுண்டரி மழையால் பயந்து நடுங்கிய ஆஸி பவுலர்ஸ்!

Rishabh Pant Smashed Second Fastest Test Fifty : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

Rishabh Pant Smashed Second Fastest Test Fifty during India vs  Australia in Sydney Test match rsk

Rishabh Pant Smashed Second Fastest Test Fifty : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) வெடிக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார், அவர் ஒரு இந்தியரின் 2ஆவது வேகமான டெஸ்ட் அரைசதத்தை அடித்தார். பண்ட் தனது 15வது டெஸ்ட் அரைசதத்தை வெறும் 29 பந்துகளில் எட்டினார், ரசிகர்களையும் வீரர்களையும் தனது அதிரடி பேட்டிங்கால் பிரமிக்க வைத்தார். இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனின் அரைசதத்தில் 6 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதற்கு முன்னதாக ரிஷப் பண்ட் 28 பந்துகளில் அரைசதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரைசத்ம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்த சாதனையை முறியடிக்க இப்போது வாய்ப்பு கிடைத்தது. எனினும் 2 பந்துகளில் அந்த சாதனையை முறியடிக்க தவறிவிட்டார்.

ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம்; அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்; என்ன நடந்தது? ரசிகர்கள் ஷாக்!

ரிஷப் பண்டின் அதிரடியான பேட்டிங் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய பண்ட் கோலி 6 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய போது களமிறங்கிய பண்ட் சந்தித்த முதல் பந்திலேயே இறங்கி வந்து சிக்ஸர் அடித்தார். இதே போன்று மிட்செல் ஸ்டார்க் வீசிய ஓவரின் முதல் பந்தை சாமிக்கு விட்ட ரிஷப் பண்ட் 2ஆவது மற்றும் 3ஆவது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். இதன் மூலமாக 29 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதங்கள் விளாசிய இந்திய வீரர்கள்:

1) ரிஷப் பன்ட் - 28 பந்துகள் vs இலங்கை, 2022

2) ரிஷப் பன்ட் - 29 பந்துகள் vs ஆஸ்திரேலியா, 2025

3) கபில் தேவ் - 30 பந்துகள் vs பாகிஸ்தான், 1982

4) ஷர்துல் தாக்கூர் - 31 பந்துகள் vs இங்கிலாந்து, 2021

5) யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 31 பந்துகள் vs வங்கதேசம், 2024

கடையாக ரிஷப் பண்ட் 33 பந்துகளில் பேட் கம்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த நிதிஷ் குமார் ரெட்டி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். சிட்னியில் நடைபெற்று வரும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 181 ரன்னுக்கு சுருண்டது. ஜஸ்ப்ரித் பும்ரா 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மேலும், அவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். ஸ்கேன் பரிசோதனை முடிவுகள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

ஜஸ்ப்ரித் பும்ரா vs மெக்ராத்: 44 டெஸ்டுக்கு பிறகு சிறந்த பவுலர் யார்?

அவர் இல்லாத நிலையில் அவருக்குப் பதிலாக கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவரது வழிகாட்டுதலின் படி முகமது சிராஜ் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 4 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், கேஎல் ராகுல் 13 ரன்னுக்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் 13 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 6 ரன்னுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். கடைசியில் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸ் போன்று விளையாடாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடிக்கவே இந்தியா 124 ரன்கள் எடுத்தது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா 8 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios