Asianet News TamilAsianet News Tamil

உன் கையில பந்து இருக்குன்னா, என் கையில பேட் இருக்குடா!தென்னாப்பிரிக்க பவுலரின் திமிருக்கு பதிலடி கொடுத்த பண்ட்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர்  மார்கோ ஜான்செனின் அத்துமீறிய செயலுக்கு தக்க பதிலடி கொடுத்தார் ரிஷப் பண்ட்.
 

rishabh pant retaliation to marcon jansens unwanted throw in third test of south africa vs india
Author
Cape Town, First Published Jan 13, 2022, 6:12 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களும் அடித்தன.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 58 ரன்களுக்கே கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, ரஹானே ஆகிய 4 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, சதத்தை நோக்கி ஆடிவருகிறார். 5வது விக்கெட்டுக்கு கோலியும் ரிஷப்பும் சேர்ந்து 94 ரன்களை குவித்தனர். கோலி 29 ரன்னில் ஆட்டமிழக்க, அஷ்வின் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். 6வது விக்கெட்டுக்கு ரிஷப்புடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.

ரிஷப்பும் அஷ்வினும் களத்தில் இருந்தபோது, 2வது இன்னிங்ஸின் 50வது ஓவரை வீசிய தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ஜான்சென், அந்த ஓவரின் கடைசி பந்தை வீசிமுடித்தபின், பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டை நோக்கி பந்தை ஆக்ரோஷமாக விட்டெறிந்தார். அதை பேட்டை வைத்து அடித்துவிட்டு, கடுங்கோபத்தை அடக்கி கூலாக நகர்ந்தார் ரிஷப் பண்ட்.

பொதுவாகவே சில ஃபாஸ்ட் பவுலர்கள் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்தமுடியாத நேரத்தில், அவர்களின் கோபத்தை தூண்டிவிடும் விதமாக பந்தை பேட்ஸ்மேன்களுக்கு நேராக விட்டெறிவார்கள். கடந்த போட்டியில் கூட, பும்ராவை வேண்டுமென்றே சீண்டி வம்புக்கு இழுத்தார் ஜான்சென். 

இந்நிலையில், இந்த போட்டியில் ரிஷப்பை சீண்டும் விதமாக பந்தை விட்டெறிந்தார். உன் கையில் பந்து இருக்குன்னா, என் கையில் பேட் இருக்குடா என்கிற ரீதியில், ஜான்சென் விட்டெறிந்த பந்தை கூலாக ஸ்ட்ரோக் செய்தார் ரிஷப்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios