வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 49 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், தோனியின் சாதனையை தகர்த்துள்ளார். 

இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் அடித்தது. அந்த அணியில் மோமினுல் ஹக் மட்டுமே சிறப்பாக ஆடி 84 ரன்கள் அடித்தார். உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினர்.

IPL 2023 Auction: சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த கேப்டன் இவர் தான்..! முத்தையா முரளிதரன் தகவல்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ராகுல் (10), ஷுப்மன் கில் (20), புஜாரா(24), கோலி (24) ஆகிய நால்வரும் சொதப்ப, அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்து சதத்தை நெருங்கிய நிலையில், ரிஷப் பண்ட் 93 ரன்களுக்கும், ஷ்ரேயாஸ் ஐயர் 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 314 ரன்கள் அடித்தது. 

87 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் அடித்துள்ளது.

இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடிய ரிஷப் பண்ட் 49 பந்தில் அரைசதம் அடித்தார். வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக சதமடித்த தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். 2007ல் வங்கதேசத்துக்கு எதிராக மிர்பூரில் நடந்த டெஸ்ட்டில் தோனி 50 பந்தில் அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட் 49 பந்தில் அரைசதம் அடித்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

IPL 2023 Mini Auction: நம்பர் 1 டி20 ஆல்ரவுண்டர் ஏலத்தில் விலைபோகாத கொடுமை

மேலும் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த 3வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். தோனி மற்றும் ரிதிமான் சஹா ஏற்கனவே அரைசதங்கள் அடித்துள்ளனர்.