ரிங்கு சிங்கிற்கு ஜாக்பாட் – ரூ.3 கோடி பரிசு தொகை அறிவிப்பு, 3 கோடியை என்ன செய்ய போகிறார் தெரியுமா?

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் சாதனைகளுக்காக லக்னோவின் அறக்கட்டளை ஒன்று ரூ.3 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

Rinku Singh has been announced a prize of Rs 3 crore on behalf of the Indira Gandhi Pratisthan in Lucknow rsk

கடந்த ஆண்டு நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ரிங்கு சிங். இதே போன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தான் அறிமுகமாகவில்லை.

கடந்த ஆண்டு 8ஆவது இடம்; இந்த ஆண்டு 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு 2ஆவது இடம் பிடித்து சாதனை!

இதுவரையில் நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 55 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 15 டி20 போட்டிகளில் விளையாடி 356 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான எம்.எஸ்.தோனிக்கு பிறகு சிறந்த பினிஷர் என்ற அடைமொழியுடன் போற்றப்படுகிறது. கடைசி வரை நின்று இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து சிறந்த பினிஷராக இருக்கிறார்.

தாயார் நலமாக இருக்கிறார் – பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் – விராட் கோலியின் சகோதரர்!

வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் தனது இடத்தை ரிங்கு சிங் தக்க வைத்துக் கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடித்தது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இந்த நிலையில் தான் அவரது சாதனையை பறைசாற்றும் வகையில் லக்னோவைச் சேர்ந்த இந்திராகாந்தி அறக்கட்டளை சார்பாக அவருக்கு பரிசுத் தொகையும், பதக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. ரிங்கு ரிங்கு சிங்கிற்கு மட்டுமின்றி குல்வீர் சிங்கிற்கும் ரூ.75 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகையை வைத்து தனது தந்தைக்காக ரிங்கு சிங் கார் ஒன்றை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் தனது தேசிய சாதனையை தானே முறியடித்து தங்கம் வென்ற பாலக் ஜோஷி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios