ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் கேப்டன்களில் முக்கியமானவர். இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி, சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து அணிகளின் மீதும் முழுக்க முழுக்க ஆதிக்கம் கோலோச்சியது. 

பாண்டிங் தலைமையில் கில்கிறிஸ்ட், ஹைடன், மைக்கே கிளார்க், சைமண்ட்ஸ், மெக்ராத், பிரெட் லீ ஆகியோர் இடம்பெற்று ஆடிய ஆஸ்திரேலிய அணி, சர்வதேச கிரிக்கெட்டில் தொடர் வெற்றிகளை குவித்து கெத்தாக நடைபோட்டது. 2003, 2007 ஆகிய உலக கோப்பைகளை அடுத்தடுத்து வென்று அசத்தியது.

மிகச்சிறந்த மற்றும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரிக்கி பாண்டிங்கின் கெரியரில் படுமோசமான சம்பவமாக ஒரு சம்பவத்தை தெரிவித்துள்ளார். 2008ல் ஹர்பஜன் சிங், சைமண்ட்ஸை குரங்கு என்று திட்டிய சம்பவம் தனது கெரியரில் தனது கட்டுப்பாட்டை இழக்கவைத்ததாக தெரிவித்துள்ளார்.

2008ல் அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அப்போது சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை ஹர்பஜன் சிங் குரங்கு என திட்டினார். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதில் ஐசிசி தலையிட்டு, பிரச்னையை முடித்துவைத்தது. இந்த சர்ச்சையிலிருந்து ஹர்பஜன் சிங் விடுவிக்கப்பட்டார். ஆனால், சைமண்ட்ஸின் கெரியர் அதன் பின்னர் வீழச்சியை சந்தித்தது. 

இந்த சம்பவம் தான் தனது கேப்டன்சி கெரியரிலேயே மோசமான சம்பவம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பாண்டிங், ஹர்பஜன் சிங் சைமண்ட்ஸை குரங்கு என்று திட்டிய மங்கிகேட் விவகாரம் தான், எனது கேப்டன்சி கெரியரின் மோசமான சம்பவமாக அமைந்தது. 2005 ஆஷஸ் தொடரை இழந்தது பெரிய இழப்பு. ஆனாலும் அப்போது நான் நல்ல கட்டுப்பாட்டில் தான் இருந்தேன். ஆனால் ஹர்பஜன் சிங் - சைமண்ட்ஸ் விவகாரத்தில் நான் எனது கட்டுப்பாட்டிலேயே இல்லை. அது எங்களை மோசமாக பாதித்தது.

Also Read - மக்களின் பாதுகாப்புதான் முக்கியம்.. ஐபிஎல் விவகாரத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் செம ஸ்ட்ரிக்ட்டு!!

அந்த விவகாரம் முடிந்த விதம் எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதை நாங்கள், பெர்த்தில் நடந்த போட்டியில் ஆடிய விதத்தில் இருந்தே அறிய முடியும். அதிலிருந்து மீண்டுவர சிலகாலம் எடுத்தது. எனவே அதுதான் எனது கெரியரின் மோசமான சம்பவம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.