டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த 2 அணிகள் ஃபைனலில் மோதும், அதில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் ஆருடம் தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

இந்திய அணி புதிய கேப்டனான ரோஹித் சர்மா மற்றும் புதிய பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஆகியோரின் வழிகாட்டுதலில் இந்த உலக கோப்பையை தூக்கியே ஆகவேண்டும் என்ற உறுதியுடன் உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலேயே இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. எனவே இந்த ஆண்டு நடக்கும் உலக கோப்பையை வென்றே தீரவேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்குகிறது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை தூக்கியே ஆகணும்.. இந்திய அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..! மனவள பயிற்சியாளராக பாடி அப்டான் நியமனம்

டி20 கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன்சி அனுபவம் கொண்ட ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இறங்குவதால், கோப்பையை வெல்லும் உத்தியை அறிந்த அவரது கேப்டன்சியில் இந்திய அணி கோப்பையை தூக்கும் என்று நம்பப்படுகிறது.

அதேபோல நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக திகழ்வதுடன் டி20உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவான அணிகளாக திகழ்கின்றன. 

அனைத்து அணிகளுமே டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்டைம் பெஸ்ட் கிரிக்கெட்டர்களில் ஒருவருமான ரிக்கி பாண்டிங், டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும், அதில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று ஆருடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - WI vs IND: இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! 3வது ODIக்கான உத்தேச ஆடும் லெவன்.. இளம் வீரர் ஒருவர் அறிமுகம்

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் டி20 உலக கோப்பை ஃபைனலில் மோதும். அதில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு, ஹோம் கண்டிஷன் சாதகமாக அமையும். கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை ஃபைனலில் ஜெயித்ததும் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் நம்பிக்கையளிக்கும் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.