Asianet News TamilAsianet News Tamil

அவரை மாதிரியான ஒரு திறமையான பேட்ஸ்மேனை நான் பார்த்ததே இல்ல..! இந்திய இளம் வீரருக்கு பாண்டிங் புகழாரம்

பிரித்வி ஷா மாதிரியான திறமையான பேட்ஸ்மேனை தான் பார்த்ததே இல்லை என்று ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

ricky ponting praises prithvi shaw is the most talented player he has ever seen
Author
Chennai, First Published Apr 5, 2021, 9:58 PM IST

இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த பிரித்வி ஷா, கடந்த 2 ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் சரியாக ஆடாமலோ அல்லது காயத்தால் எந்த தொடரிலும் முழுமையாக ஆடாமலோ இருந்துவந்தார்.

இந்திய டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை மயன்க் அகர்வால் மற்றும் ஷுப்மன் கில்லிடம் இழந்தார். இந்திய அணியில் தனது இடத்தை இழந்த பிரித்வி ஷா, நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஹசாரே தொடரில் மீண்டும் செம ஃபார்மில் ஆடி ரன்களை குவித்தார்.

விஜய் ஹசாரே தொடரில் செம ஃபார்மில் வெறித்தனமாக ஆடி போட்டிக்கு போட்டி சதம் விளாசி தெறிக்கவிட்ட பிரித்வி ஷா, லீக் சுற்றில் ஒரு இரட்டை சதமும், ஒரு சதமும் அடித்த பிரித்வி ஷா, சவுராஷ்டிராவிற்கு எதிரான காலிறுதி போட்டியில் 185 ரன்களையும், கர்நாடகாவுக்கு எதிரான அரையிறுதியில் 165 ரன்களையும் குவித்து மும்பை அணியை ஃபைனலுக்கு அழைத்து சென்றார். உத்தர பிரதேசத்துக்கு எதிரான ஃபைனலில் 39 பந்தில் 73 ரன்களை குவித்து மும்பை அணி 4வது முறையாக கோப்பையை வெல்ல உதவினார்.

ricky ponting praises prithvi shaw is the most talented player he has ever seen

8 போட்டிகளில் 4 சதங்களுடன் 827 ரன்களை குவித்தார். இதுதான். இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்த பிரித்வி ஷா, ஐபிஎல்லில் அசத்த காத்திருக்கிறார். கடந்த சீசனின் முதல் பாதியில் நன்றாக ஆடிய பிரித்வி ஷா, 2வது சீசனில் சொதப்பி, கடைசி சில போட்டிகளில் ஆடவில்லை.

நல்ல ஃபார்மில் இருக்கும் பிரித்வி ஷா, வரும் சீசனில் மிரட்டலாக ஆட காத்திருக்கும் நிலையில், பிரித்வி ஷா மாதிரியான திறமையான வீரரை, தான் பார்த்ததே இல்லை ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரும் முன்னாள் ஜாம்பவானும், டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios