WTC 2021-23: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த பெஸ்ட் லெவன்..! ரிக்கி பாண்டிங்கின் அதிரடி தேர்வு
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-2023 ஃபைனலில் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2019-2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்து அணி ஃபைனலில் இந்தியாவை வீழ்த்தி முதல் டைட்டிலை ஜெயித்தது.
அதைத்தொடர்ந்து 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் விறுவிறுப்பாக நடந்த நிலையில், இந்த காலக்கட்டத்தில் அதிகமான டெஸ்ட் போட்டிகளை ஜெயித்து அதிக வெற்றி விகிதங்களுடன் டாப் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஃபைனலில் மோதுகின்றன.
வரும் ஜூன் 7ம் தேதி முதல் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஃபைனல் லண்டன் ஓவர்லில் தொடங்குகிறது. இரு அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், 2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக ஆடிய இந்தியா - ஆஸ்திரேலியா வீரர்கள் ஒருங்கிணைந்த சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள பாண்டிங், 3ம் வரிசையில் லபுஷேன், 4ம் வரிசையில் கோலி, 5ம் வரிசையில் ஸ்மித் என சமகாலத்தின் தலைசிறந்த 3 டெஸ்ட் வீரர்களை தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி. ஸ்பின்னர்களாக ஆல்ரவுண்டர் ஜடேஜா மற்றும் நேதன் லயன் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலர்களாக பாட் கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஷமி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.
IPL 2023: ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட்டு கவாஸ்கர் புகழாரம்
ரிக்கி பாண்டிங் தேர்வு செய்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இந்தியா - ஆஸ்திரேலியா ஒருங்கிணைந்த பெஸ்ட் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், முகமது ஷமி.