IPL 2023 Final CSK vs GT: ஐபிஎல் கோப்பை யாருக்கு..? ஃபைனலில் களமிறங்கும் CSK - GT அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஐபிஎல் 16வது சீசனில் இன்று நடக்கும் ஃபைனலில் களமிறங்கும் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் இன்றுடன் முடிகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் ஃபைனலில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
4 முறை சாம்பியன் சிஎஸ்கே மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளுமே சமபலம் வாய்ந்த சிறந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஃபைனலில் களமிறங்கும் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச சிஎஸ்கே அணி: (இம்பேக்ட் பிளேயர் உட்பட)
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரனா.
உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி: (இம்பேக்ட் பிளேயர் உட்பட)
ஷுப்மன் கில், ரிதிமான் சஹா, சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஷ் லிட்டில்.